எந்திரன் - 20

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
உள்ளே... நச்சுக் காற்று வெளியே... நல்ல காற்று! - CATALYTIC CONVERTERதொடர்: தொழில்நுட்பம்பரணிராஜன்

கேட்டலிட்டிக் கன்வெர்ட்டர் என்பது இன்ஜினின் வெளிப்புறம், மாசைக் கட்டுப்படுத்தும் ஓர் அமைப்பு. வேதியியலில் கேட்டலிஸ்ட் (Catalyst) என்றொரு பதம் உண்டு. அதன் பொருள், வினையூக்கி. ஒரு வேதிவினையைத் தூண்டிவிடுவதாகும். ஆனால் இவை, அந்த வினையில் பங்கேற்காது. வேறு இரு மூலக்கூறுகள் பங்குபெறும் வினைகளில், இந்த கேட்டலிஸ்ட் எனப்படும் பொருட்கள் வினையைத் தூண்டிவிடும். இரண்டு பேருக்கு இடையில் சண்டையை மூட்டிவிட்டு, சத்தமில்லாமல் வேடிக்கை பார்க்கும் சூனாபானாக்கள் இவை.

என்னதான் விதவிதமாக இன்ஜினை வடிவமைத்தாலும், ஒரு குறிப்பிட்ட அளவுக்குக் கீழ் வெளிவரும் மாசுக்களைக் கட்டுப்படுத்த முடியாது. இன்ஜின் ஸ்டாய்கியோமெட்ரிக் விகிதப்படி இயங்கினால், முழுமையான எரிதல் நடந்து மாசுக்கள் வெளிவராது. நடைமுறையில் பல சிக்கல்கள் உண்டு. சில சமயம் இது லீன் மிக்‌ஷர் (Lean Mixture) ஆக இருக்கும்; (அதிகக் காற்று + குறைவான எரிபொருள்) இன்னும் சில சமயங்களில் ரிச் மிக்‌ஷர் (Rich Mixture) (குறைவான காற்று + அதிக எரிபொருள்) என இருக்கும். அப்படியான சமயங்களில் முழுமையான எரிதல் நடக்காது. அப்போது வெளிவரும் எரிந்த வாயுக்களில் இருக்கும் மாசுக்களைக் கட்டுப்படுத்துவதுதான் இந்த வினையூக்கிகள் அடங்கியிருக்கும் கேட்டலிட்டிக் கன்வெர்ட்டரின் (Catalytic Converter) வேலை. இந்த கன்வெர்ட்டர், காரின் கீழே இன்ஜினுக்கும் - எரிந்த வாயுக்கள் வெளிவரும் பைப்புக்கும் நடுவே இருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick