மோட்டார் நியூஸ் | Latest Motor news update - Motor Vikatan | மோட்டார் விகடன்

மோட்டார் நியூஸ்

அப்-டு-டேட் செய்திகளுக்கு...motor.vikatan.com

இதுதான் மஹிந்திராவின் புதிய ஸைலோவா?

இந்த ஆண்டு இறுதிக்குள் மஹிந்திரா, புதிய எம்பிவி ஒன்றை அறிமுகப்படுத்தும் என காற்றுவாக்கில் வந்த செய்தி உண்மையாகப் போகிறது. ஆம், TUV5OO என்ற கார் தற்போது டெஸ்ட்டிங்கில் இருப்பது உறுதியாகியிருக்கிறது. சேலம் - பெங்களூர் நெடுஞ்சாலையில் இந்த கார் சென்றுகொண்டிருந்தபோது, அதனைப் படம் பிடித்திருக்கிறார் மோட்டார் விகடன் வாசகர் H.ஜலாலுதீன். மஹிந்திரா கார்களுக்கே உரித்தான கிரில் டிஸைன், XUV5OO காரை நினைவுபடுத்தும் முன்பக்கம், நீளமான வீல்பேஸ், நல்ல ஹெட்ரூம் போன்றவை தெரிகின்றன. ஸைலோவின் பலமான மூன்று வரிசை இருக்கைகள் இடவசதி, ஸ்டைலான டிஸைன், மாடர்ன் கேபின், போதுமான சிறப்பம்சங்கள், நிறைவான ஓட்டுதல் அனுபவம் போன்றவற்றை இதில் எதிர்பார்க்கலாம். டெல்லி மற்றும் கேரளாவில் இந்த காரை விற்பனை செய்வதற்கு வசதியாக, தான் வைத்திருக்கும் 1.99 லிட்டர் mHawk இன்ஜினை இந்த காரில் மஹிந்திரா பொருத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும், மோனோகாக் சேஸியை அடிப்படையாகக்கொண்டு, தொழில்நுட்பரீதியில் அப்டேட்டாக கார் விரைவில் களம் காண இருக்கிறது.

மஹிந்திரா ஸைலோ காரைப் படம் எடுத்து அனுப்பிய வாசகர் ஜலாலுதீன், ஜெர்கின் பரிசாகப் பெறுகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick