மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில் | Motor Clinic - Motor Vikatan | மோட்டார் விகடன்

மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

ஸ்கோடா சூப்பர்ப் பெட்ரோல் வாங்கலாமா?

ஸ்கோடா சூப்பர்ப் காரின் டாப் வேரியன்ட் பெட்ரோல் மாடலை வாங்க விரும்புகிறேன். இந்த காரின் ப்ளஸ், மைனஸ் என்ன? இதே விலையில் வேறு ஏதெனும் சிறந்த கார்கள் இருந்தால், அதைப் பற்றியும் கூறுங்கள்.

- ஆ.போஜன் ராஜன், விழுப்புரம்.,


முற்றிலும் புதிய பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்டுள்ள ஸ்கோடா சூப்பர்ப், பழைய மாடலுடன் ஒப்பிடும்போது டிஸைன், இடவசதி, சிறப்பம்சங்கள், தொழில்நுட்பம், பெர்ஃபாமென்ஸ், ஒட்டுமொத்தத் தரம் போன்ற விஷயங்களில் அடுத்த கட்டத்துக்குச் சென்றிருக்கிறது. ஒரே மைனஸ், காரின் விலையும் பராமரிப்புச் செலவுகளும் அடுத்த கட்டத்துக்குச் சென்றிருப்பதுதான்.

ஸ்கோடா சூப்பர்ப்க்கு தற்போது டொயோட்டா கேம்ரி மட்டுமே போட்டி. இதில் டீசல் இன்ஜின் ஆப்ஷன் இல்லாவிட்டாலும், ஹைபிரிட் தொழில்நுட்பம் இருப்பது பலம். சூப்பர்ப் காரைவிட அற்புதமான மைலேஜ் மற்றும் குறைவான மாசு வெளிப்பாடு கொண்டது என்றாலும், ஸ்கோடா காரில் கிடைக்கும் ஓட்டுதல் அனுபவம், சொகுசு - கேம்ரியில் இல்லாதது நெருடல். நீங்கள் கொஞ்சம் காத்திருக்க முடியும் என்றால், இதே செக்மென்ட்டில் ஹோண்டா அக்கார்டு, ஃபோக்ஸ்வாகன் பஸாத் போன்ற கார்கள், புதிய அவதாரத்தில் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick