வெற்றிக் கோப்பை நமக்கே! | Mahindra Adventure Monsoon Challenge 2016 results - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெற்றிக் கோப்பை நமக்கே!

ராலி : மஹிந்திரா மான்ஸூன் சேலஞ்ச்கா.பாலமுருகன், படங்கள்: தி.விஜய்

ஹிந்திரா நிறுவனம் நடத்தும் அட்வென்ச்சர் போட்டிகள் பற்றிக் குறிப்பிட்டாலே ராலி ரசிகர்களின் இதயங்கள் தடதடக்கும். நாடெங்கும் எங்காவது ஓர் இடத்தில் ஆஃப் ரோடிங், அட்வென்ச்சர், ராலி என ஆண்டு முழுவதும் ஏதாவது ஒரு மோட்டார் ஸ்போர்ட்ஸ் போட்டியை நடத்திக்கொண்டே இருக்கிறது மஹிந்திரா. அதில் முக்கியமானது மஹிந்திரா மான்ஸூன் சேலன்ச். மங்களூர் டூ கோவாதான் ரூட். இது, இந்த ராலிக்கு ஆறாவது சீஸன்.

கடந்த ஜூன் 24 முதல் 26 வரை நடைபெற்ற இந்த ராலி, ஐந்து பிரிவுகளில் நடைபெற்றது. இதில், மோட்டார் விகடன், மீடியா பிரிவில் பங்கேற்றது. நான் டிரைவராகவும் போட்டோகிராபர் விஜய் நேவிகேட்டராகவும் கலந்துகொண்டோம். எங்களையும் சேர்த்து இதில், மொத்தம் 25 மஹிந்திரா வாகனங்கள் கலந்துகொண்டன. TSD எனப்படும் இந்த ராலி, நேரம் - தூரம் - வேகத்தை அடிப்படையாகக் கொண்டது.

ஜூன் 24-ம் தேதி மதியம் மங்களூரில் மழை அடித்து ஓய்ந்திருந்தது. நீர்க்கால்கள் வழியெங்கும் ஓடிக் கொண்டிருக்க... மங்களூரின் ஃபோரம் மாலில் ராலிக்கான துவக்க விழா. அங்கே எங்களுக்கான மஹிந்திரா KUV100 காத்திருந்தது. சம்பிரதாயமாகக் கொடியசைத்துத் துவக்கி வைக்கப்பட்ட அன்றைய விழாவில் கலந்துகொண்டு, தங்க வேண்டிய ஹோட்டலுக்குத் திரும்பினோம். அப்போதே கவனித்தேன். எங்கள் KUV100-ல் டீசல் கொஞ்சம் குறைவாக இருந்தது. ‘சரி; நாளை வழியில் எங்காவது நிரப்பிக் கொள்ளலாம்’ என விட்டுவிட்டோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick