"வீட்ல லவ்... ட்ராக்ல ஃபைட்!” | India's First Racing Couples from Chennai - Motor Vikatan | மோட்டார் விகடன்

"வீட்ல லவ்... ட்ராக்ல ஃபைட்!”

இந்தியாவின் முதல் ரேஸ் தம்பதியர்! - சிண்டி - ஆண்டிரேஸ் : தம்பதியர்தமிழ், படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

ன்னிக்குக் காலையில ஆறு மணி இருக்கும். இளஞ்சூடான ஃபில்டர் காபி போல மஞ்சள் வெயில்... சென்னை தீவுத் திடல் அருகே உள்ள அந்த மைதானத்தில் வாக்கிங், ஜாகிங் ஹெல்த் சிட்டிசன்களுக்கு மத்தியில், ‘வ்வ்ர்ர்ரூம்... வ்வ்ர்ர்ரூம்’ என்று இளசுகளும் சிறுசுகளுமாக சம்பந்தமே இல்லாமல் அப்பாச்சியிலும் R15-யிலும் பறந்து பறந்து பைக்கிங் செய்துகொண்டிருந்தார்கள். ‘அதிகாலை வாக்கிங், ஜாகிங், ஏன் - லாஃபிங் பயிற்சிகூட ஓகே; இது என்ன பைக்கிங்?’ என்று விசாரித்தபோது, ‘‘எதுவா இருந்தாலும் எங்க பாஸுங்ககிட்ட கேட்டுக்கோங்க!’’ என்று கைகாட்டினார் ஒரு R15 பையன்.

‘‘வெல்கம் டு AS மோட்டார் சைக்கிள் ரேஸிங் ஸ்கூல்...’’ என்று வரவேற்றார்கள் சிண்டி சௌந்தரி - அனந்த்ராஜ் தம்பதியர். ‘The First Racing Couple of India’ என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டவர்கள் - பைக், ரேஸ், காதல், குடும்பம் என்று கலந்து கட்டி தங்கள் வாழ்க்கையை அனுபவித்து வருகிறார்கள். ‘பரபர துறுதுறு’ பெண்களைக்கொண்ட ‘பைக்கர் பேப்ஸ்’ என்ற கிளப்பைச் சேர்ந்தவர் சிண்டி. இது தவிர, ‘AS மோட்டார் சைக்கிள் ரேஸிங் ஸ்கூல்’ என்ற ரேஸ் பயிற்சி நிறுவனத்தின் உரிமையாளர். சிண்டி சௌந்தரி - அனந்தராஜ் தம்பதியரின் காதல் கதை ரொம்ப சுவாரஸ்யமானது.

‘‘டாக்டர் தம்பதியர், நடிப்புத் தம்பதியர், அரசியல் தம்பதியர் கேள்விப்பட்டிருக்கிறோம்; ரேஸ் தம்பதியர் நீங்கள்... டிராக்லயும் வீட்லயும் எப்படிச் சமாளிக்கிறீங்க?’’ என்றபோது, ‘‘டிராக்லதான் நாங்க மோதுவோம்; வீட்ல நாங்க செம லவ்வர்ஸ் ப்ரோ!’’ என்று வெட்கமும் வேகமுமாகப் பேசினார்கள் இருவரும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick