மத்தி மரம்... குள்ளர் குகை... ஜவ்வாது மலை!

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் : ஃபோர்டு ஆஸ்பயர்நெய்வேலி to ஜவ்வாது மலைதமிழ், படங்கள்: கா.முரளி

ம்மாவின் அன்பையும், அரிஸ்டாட்டிலின் அறிவையும் எப்படிச் சந்தேகப்பட வேண்டியதில்லையோ, அதேபோல்தான் ஃபிகோ ஆஸ்பயரின் பெர்ஃபாமென்ஸையும் சந்தேகப்பட வேண்டியது இல்லை. ‘இருட்டுறதுக்குள்ள 350 கி.மீ போயிடலாமா?’ என்று நாம் சந்தேகப்பட்டதைத் தவிடுபொடியாக்கிச் சிரித்தது ஆஸ்பயரின் 100bhp பவர். இந்த மாதம் ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் பயணத்துக்காக நாம் நெய்வேலியில் இறங்கி, வாசகர் ஜெயேந்திரனின் புத்தம் புது ஆஸ்பயரில் ஏறி, மறுபடியும் ஜவ்வாது மலையில் இறங்கியபோது, ‘ப்ச்... அதுக்குள்ள ஸ்பாட் வந்துடுச்சா?’ என்று சலிப்புதான் ஏற்பட்டதே தவிர, பயண அலுப்பே தெரியவில்லை. இதைத்தான் ஃபன் டு டிரைவ் என்பார்கள். ஃபோர்டு கார்கள் Fun to Drive-க்குப் பெயர் பெற்றவை. ஆஸ்பயரும் அப்படித்தான்.

‘‘எப்படியாவது கிரேட் எஸ்கேப்பில் கலந்துக்கணும்; நானும் என் ஆஸ்பயரும் உங்களுக்காகவே எப்பவுமே காத்திருப்போம்!’’ என்று ஆஸ்பயர் வாங்கிய அடுத்த மாதமே நமக்கு வாய்ஸ் ஸ்நாப் செய்திருந்தார் ஜெயேந்திரன். நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் ஃபோர்மேனாகப் பணிபுரியும் ஜெயேந்திரன், தான் ஆஸ்பயர் வாங்கிய கதையை ஒன்லைனாகச் சொன்னார்.

‘‘ஆஸ்பயர் வாங்குறதுல எனக்கு எந்தவிதக் குழப்பமுமே இல்லை; காரணம் - என் பசங்களும், மோட்டார் விகடனும்தான். ஆஸ்பயரைப் பார்த்தவுடனே புக் பண்ணிட்டேன்! போன மாசம் மோ.வி-யிலகூட ஆஸ்பயர்தான் வின்னர்னு நினைக்கிறேன். சரியா?’’ என்று நம்மைப் பார்த்தபோது, ‘‘ஏங்க, அது பெட்ரோல் மாடல்... நம்மகிட்ட இருக்குறது டீசல்!’’ என்று தனது ஆட்டோமொபைல் அறிவைக் காட்டினார் ஜெயேந்திரனின் மனைவி வைதேகி.

மொத்தம் நான்கே நான்கு பேர்; நான்கு சிலிண்டர் டீசல் இன்ஜின், பயணத்தின்போது எந்தவிதத்திலும் திணறவில்லை. வாங்கி ஐந்து மாதங்கள்கூட ஆகவில்லை; ஓடோ மீட்டர் 8,000  கி.மீ தாண்டியிருக்கவில்லை; ஏர்பேக் இல்லை, ABS இல்லை என்று எந்தக் குறையும் இல்லை. அதனால், ‘எவ்வளவு தூரம் வேணாலும் போலாம்’ என்று நம்பிக்கைக்கும் குறை வைக்கவில்லை ஆஸ்பயர். அநேகமாக ஃபோர்டு செடான் கார்களில், வசதிகள் அதிகமான கார் ஆஸ்பயராகத்தான் இருக்கும். இருந்தாலும், ரியர் ஏ.சி வென்ட் இல்லை; பட்டன் ஸ்டார்ட் இல்லை போன்ற குறைகளும் இல்லாமல் இல்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick