மாயமான்! - Pokemon டிரைவ்! | Pokémon Go - Trending Mobile game - Motor Vikatan | மோட்டார் விகடன்

மாயமான்! - Pokemon டிரைவ்!

மொபைல் கேம்: போக்கிமான்கார்க்கி பவா

“வாங்கடா வாங்கடா” என மொத்த உலகையும் தன் பின்னால் வர வைத்து பெப்பே காட்டிக் கொண்டிருக்கிறான் ’போக்கிமான்.’ இதன் பின்னால் சென்ற அமெரிக்க இளைஞர்கள் இருவர், திருடர்கள் என நினைத்துச் சுடப்பட்டு இருக்கிறார்கள். கலிஃபோர்னியாவில் உயரமான ஒரு கட்டடத்தில் இருந்து ஒருவர் தவறி விழுந்திருக்கிறார். சில உயிர்களையும், பல பேருக்குப் படு காயங்களையும் தந்திருக்கும் இந்த போக்கிமான், ஒரு மொபைல் கேம்?

நிஜ உலகின் மீது ஒரு டிஜிட்டல் லேயரைச் சேர்ப்பதுதான் ஆக்மெண்டட் ரியாலிட்டி தொழில்நுட்பம். ஒரு உதாரணம் பார்ப்போம். ஒரு பைக் இருக்கிறது; அதை மொபைல் வழியாகப் பார்க்கும்போது, ஓர் உருவம் பைக்கின் மீது அமர்ந்திருக்கும். அதில் பைக் நிஜம்; அதன் மீது அமர்ந்திருக்கும் உருவம் பொய். படு கிக்கான இந்த காம்பினேஷன்தான் ஆக்மெண்டட் ரியாலிட்டியின் பலம். இதை வைத்துத்தான் ‘போக்கிமான் கோ கேம்’ அப்ளிகேஷன் உருவாக்கப்பட்டிருக்கிறது.

போக்கிமான் கோ விதிகள் எளிமையானவை. உங்கள் மொபைலில் இந்த கேம் இன்ஸ்டால் செய்ததும், உங்கள் இருப்பிடத்தை GPS மூலம் குறித்துக் கொள்ளும். உங்களுடைய பெயரை, அதில் வருகின்ற வெர்ச்சுவல் மனிதனுக்குச் சூட்டிக்கொள்ளலாம். அந்த வெர்ச்சுவல் மனிதன், நிஜ உலகில் இருக்கும் பூச்சிகளைத் தேடிப் பிடிக்க வேண்டும். அந்தப் பூச்சிகளுக்குதான் போக்கிமான் என்று பெயர். உங்களைச் சுற்றி எங்கெல்லாம் போக்கிமான்கள் இருக்கின்றனவோ, அந்த இடங்கள் நீல நிற பாக்ஸாகத் தெரியும். அந்த நீல நிற பாக்ஸை க்ளிக் செய்தால், அந்த இடம் எது என்பதை படத்துடன், லொகேஷனையும் காட்டும். இனி கோழி பிடிப்பதுபோல போக்கிமான்களை நிஜ உலகில் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதைத் தேடிக் கண்டுபிடித்துவிட்டால், “Gotcha” என்கிறது இந்த ஆப். அதாவது “பிடிச்சுன்டேண்டா டேய்” என அர்த்தம். GPS மூலமாக உங்களுடைய விர்ச்சுவல் விளையாட்டுத் தளம், நிஜ உலகோடு கனெக்ட் செய்யப்பட்டிருக்கும். கிட்டத்தட்ட கூகுள் மேப்பில் வழி கண்டுபிடித்து பயணம் செய்வது போலத்தான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick