அம்பானிகளுக்கு பியாஜியோ அர்மானி!

பியாஜியோ வெஸ்பா 946 எம்போரியா அர்மானி, ஃபர்ஸ்ட் லுக்தமிழ்

பெர்ஃபாமென்ஸ், ஸ்டைலுக்கு இணையாக விலையிலும் அதிரடி காட்டுவது பியாஜியோ ஸ்டைல். பியாஜியோவில் இருந்து அடுத்த அதிரடி தயாராகிவிட்டது. ஆனால், இது கொஞ்சம் இல்லை... ரொம்பவே காஸ்ட்லி. ஆமாம்! நம்புங்கள் சூப்பர் பைக் விலையில், ஒரு ஸ்கூட்டரை அறிமுகம் செய்திருக்கிறது பியாஜியோ. ஸ்கூட்டரின் பெயர் வெஸ்பா 946 எம்போரியா அர்மானி.

உச்சரிப்பே கிட்டத்தட்ட அம்பானிக்கு இணையாக இருக்கிறதுதானே!? விலையும் அப்படியே. இதன் பூனே எக்ஸ் ஷோ-ரூம் விலை, ஜஸ்ட் 12 லட்சம் ரூபாய். அர்மானி என்பவர், இத்தாலியில் ஆண்களுக்கான ஃபேஷன் டிஸைனைத் தொடங்கிவைத்த முன்னோடி. அவரது பெயரில் செயல்படும் ஃபேஷன் டிஸைனிங் நிறுவனமான ஜியார்ஜியோ அர்மானியும், பியாஜியோவும் சேர்ந்துதான் இந்த எம்போரியா அர்மானி ஸ்கூட்டரை ரிலீஸ் செய்திருக்கின்றன. பியாஜியோ குரூப்பின் 130-வது பிறந்த நாளையும், ஜியார்ஜியோ அர்மானி நிறுவனத்தின் 40-வது அன்னிவெர்ஸரியையும் கொண்டாடும்விதமாக வெளிவந்திருக்கிறது எம்போரியா அர்மானி.

பெயரில் 946 இருக்கிறது என்பதால், இது ஏதோ 1,000 சிசி ஸ்கூட்டர் என்று நினைக்க வேண்டாம். வெஸ்பாவின் முதல் ஸ்கூட்டர் 1946-ல் வந்ததாலும், 1946 மாடலை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப் பட்டிருப்பதாலும் இதில் 946 ஒட்டிக்கொண்டுவிட்டது. சாதாரண 125 சிசி இன்ஜின்; சிங்கிள் சிலிண்டர்; 3 வால்வ், 4 ஸ்ட்ரோக், சிங்கிள் ஓவர்ஹெட் கேம்ஷாஃப்ட்தான். டார்க் 1.3kgm, பவர் 11.7 bhp, என்று எல்லாமே சாதாரண விஷயங்கள்தான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick