பெஸ்ட் பெர்ஃபார்மரா பெனெல்லி? | First Drive - Benelli 302 R - Motor Vikatan | மோட்டார் விகடன்

பெஸ்ட் பெர்ஃபார்மரா பெனெல்லி?

ஃபர்ஸ்ட் டிரைவ், பெனெல்லி 302Rதொகுப்பு: ராகுல் சிவகுரு

பெனெல்லி 302R பைக்கின் டெஸ்ட் ரிப்போர்ட்டை ஆரம்பிப்பதற்கு முன்பு, தமிழ்ப் படங்களின் தலைப்பு வருவதற்கு முன்பாக வரும் நோட்டீஸ் போல, ஒரு விஷயத்தை இங்கு சொல்ல வேண்டும். அதாவது, ‘இங்கு படங்களில் காணப்படும் பைக், ஒரு Pre-Production மாடல். ஜனவரி 2017-ல் இந்த பைக் விற்பனைக்கு வரும்போது, சிலவற்றில் மாற்றங்கள் இருக்கலாம்’ என பெனெல்லி கூறியுள்ளது. 

டிஸைன்

பெனெல்லி 302R பைக்கின் டிஸைன் சிறப்பாகவே இருக்கிறது. ஆனால், முன்பக்க ஃபேரிங் அகலமாக இருப்பதும், பைக்கின் பின்பக்கம் மெலிதாக இருப்பதும் சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். இதைத் தவிர்த்துப் பார்த்தால் ஹெட்லைட், விண்ட் ஷீல்டு, எக்ஸாஸ்ட் ஆகியவை வடிவமைக்கப்பட்ட விதம் அருமை. ஒரு ரேஸ் பைக்கைப் போல, பெனெல்லி 302R பைக்கின் ஃபேரிங்கில் அதிக ஸ்டிக்கர்கள் இருக்கின்றன. ஆனால் அதில் B302R, Anniversary, BJ 300GS-C, TXV, SuperMoto என அதிக அளவில் வார்த்தைகள் இருப்பதால், எது பைக்கின் பெயர் என்பதில் குழப்பம். கவலை வேண்டாம்; ஜனவரி 2017-ல் பெனெல்லி 302R விற்பனைக்கு வரும்போது, இந்த ஸ்டிக்கர்கள் இருக்காது.

இன்ஜின் பெர்ஃபாமென்ஸ்

நேக்கட் ஸ்ட்ரீட் பைக்கான TNT 300-ல் இருக்கும் அதே பேரலல் ட்வின், லிக்விட் கூல்டு, 300சிசி - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணிதான் பெனெல்லி 302R பைக்கிலும் இடம்பெற்றுள்ளது. ஆனால், இதன் டெக்னிக்கல் விவரங்களைப் பார்க்கும்போது, TNT 300 பைக்கைவிடச் சற்று குறைவான பவர் மற்றும் டார்க்கையே இது வெளிப்படுத்துகிறது. இதற்கு BS-IV மாசுக் கட்டுப்பாட்டு விதிகளுக்கு ஏற்ப இன்ஜின் டியூன் செய்யப்பட்டிருப்பதே காரணம். ஜனவரி 2017-ல் பெனெல்லி 302R விற்பனைக்கு வரும்போது, TNT 300 பைக்கைப்போலவே இன்ஜின் பவர் (38.2bhp) - டார்க் (2.65kgm) இருக்கும் என பெனெல்லி கூறியுள்ளது. இந்தத் தகவல், இந்தியாவில் இதே செக்மென்ட்டில் பைக் விற்பனை செய்யும் சிலருக்குக் கலக்கத்தை ஏற்படுத்தலாம். நாம் டெஸ்ட் செய்த பைக், Pre-Production மாடல் என்பதால், முழுமையான பெர்ஃபாமென்ஸ் தகவல்களுக்கு, இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick