குஷி பைக்ஸ்!

ஃபர்ஸ்ட் டிரைவ், மோட்டோ குஸி V9 ரோமர் & V9 பாப்பர்தொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி

ந்தியாவில் மீண்டும் இத்தாலிய பைக் நிறுவனங்களின் படையெடுப்பு. இந்த முறை ரொம்பவே, அழகான இரண்டு மோட்டார் சைக்கிள்கள் இந்தியாவுக்கு வந்துள்ளன. பைக் ஆர்வலர்களுக்கு மோட்டோ குஸி பற்றி தெரியாமல் இருக்காது. அவர்களுக்காகவே இப்போது இந்தியாவுக்கு வந்திருக்கிறது மோட்டோ குஸி V9 ரோமர் மற்றும் V9 பாப்பர் பைக்குகள்.

V9 ரோமர் பைக்கைப் பார்த்தவுடன் முதலில் சிலர் காதலில் விழுந்துவிடுவார்கள். சிலர், நாள் கடந்து அதன் காலில் விழுவார்கள். இதன் பாரம்பர்யமான டிஸைன் அத்தனை வசீகரம். கலர் ஆப்ஷன்கள் எல்லாமே அட்டகாசம். பெயின்ட் தரம் சூப்பர். வட்டவடிவ ஹெட்லைட், சிங்கிள்-டயல் இன்ஸ்ட்ரூமென்ட் டயல் ஆகியவை பார்க்க ரொம்ப ஸ்டைல். ஸ்பீடோ மீட்டரில் குட்டியாக ஒரு டிஸ்ப்ளே இருக்கிறது. அதில் டிராக்‌ஷன் கன்ட்ரோல், டெம்பரேச்சர், ட்ரிப் மீட்டர்கள் போன்றவை உள்ளன. சுவிட்ச்களின் தரம் சிறப்பாக உள்ளன.

ஃப்யூல் டேங்க்தான் ரோமர் பைக்கைப் பார்த்தவுடன், கண்ணில் படும் விஷயம். வழக்கமான க்ரூஸர் பைக்குகளில் இருப்பதுபோல சாதாரணமாக இல்லாமல், ஷார்ப்பாக இருக்கிறது. டேங்குக்குக் கீழ் உள்ள சிலிண்டர் ஹெட்கள் இரண்டும் தனித்துத் தெரிகின்றன. சீட் தட்டையாக இருப்பதால்,  ஒருவர் அமர்ந்தாலே, கொஞ்சம் இடப்பற்றாக்குறை ஏற்படுகிறது. பைக்கின் பின்பக்கம் அழகாக வளைவு நெளிவுகளுடன் இருக்கிறது.

சீட்டிங் பொசிஷன் நேராக, வசதியாக இருக்கிறது. ஜாலியாக ஓட்டலாம் என்றால், பைக்கின் 199 கிலோ எடையையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இன்ஜின் சிலிண்டர் ஹெட்களுக்கு நேர் கீழேதான் கால் பாதங்களை வைக்க வேண்டும். இந்த சீட்டிங் பொசிஷன் உயரமாக இருப்பவர்களுக்கு வசதியாக இருக்காது.

853 சிசி, 90-டிகிரி V-ட்வின், ஏர்-கூல்டு  இன்ஜின் சத்தம் கணீரென்று உள்ளது. ஆனால், ஐடிலிங்கில் கொஞ்சம் அதிர்வுகள் இருக்கின்றன. சிலிண்டர் ஹெட்களுக்கு அருகில் கால் இருந்தாலும், எதிர்பார்த்த அளவு வெப்பம் இல்லை.

55 bhp,  61.15 kgm டார்க் டெலிவரி சீற்றமாக இருக்கிறது. 3,000 ஆர்பிஎம்-ல் இருந்தே நல்ல சீரான பவர் டெலிவரி. ரொம்பவே வேகமான இன்ஜின் இல்லையென்றாலும், நல்ல பெர்ஃபாமென்ஸ். 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் அப்ஷிஃப்ட்களில் ஸ்மூத்தாக இருந்தாலும், டவுன்ஷிஃப்ட்டுகளின்போது கொஞ்சம் சொதப்புகிறது. வளைவுகளில் நல்ல ஸ்டெபிலிட்டி. முன்பக்கம் உள்ள 40 மிமீ  டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகள் மேடு பள்ளங்களைச் சிறப்பாகச் சமாளிக்கின்றன. பின்பக்கம் உள்ள அட்ஜஸ்டபிள் ட்வின் ஷாக் அப்ஸார்பர்கள் கொஞ்சம் இறுக்கமாக இருக்கின்றன. ஆனால், வேகமாகச் செல்லும்போது மேடுகளைச் சிறப்பாகச் சமாளிக்கிறது. மெதுவாகச் செல்லும்போது சுமார்தான். ஏபிஎஸ் கொண்ட 320 மிமீ முன்பக்க டிஸ்க் பிரேக்ஸ், 260 மிமீ பின்பக்க டிஸ்க் பிரேக்ஸ், பைரலி ஸ்போர்ட் டெமான் டயர்கள் பிரேக் போடும்போது கச்சிதமாக இயங்குகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick