‘‘சாதனைப் பயணம் தொடரும்!’’ | Bike Trip - Motor Vikatan | மோட்டார் விகடன்

‘‘சாதனைப் பயணம் தொடரும்!’’

பைக் பயணம், சாதனைஆ. ஐஸ்வர்ய லட்சுமி

கொஞ்ச நாட்களுக்கு முன்பு வரை வக்கீல், பேச்சாளர், புகைப்பட நிபுணர், பயண ஏற்பாட்டாளர் - இப்படித்தான் பாலாஜி மோகனை அடையாளம் காட்டினார்கள். இப்போது, ‘பைக் ரைடர்’ என்கிற பதவியும் ஒட்டிக்கொண்டுவிட்டது, பெங்களூரில் வசிக்கும் சென்னையைச் சேர்ந்த பாலாஜி மோகனுக்கு. இவரின் சாதனை, 24 மணி நேரத்துக்குள் 1,500 கி.மீ-களைக் கடக்கும் அயன்பட்டுகளின் வேகத்தையும் தாண்டியது. அதனால்தான் தேசிய அளவில் சாதனை செய்த இவரை ‘இந்தியாவின் பெஸ்ட் பைக் ரைடர்’ என்று அழைக்கிறார்கள்.

‘லே டு கன்னியாகுமரி’ என்று நீங்கள் கூகுளில் டைப் செய்தால், 63 மணி நேரம் என்று காட்டும். ஆனால், இதை 61 மணி நேரத்தில், தனது பைக்கில் கடந்து ‘பெஸ்ட் பைக் ரைடர்’ என்னும் தேசிய சாதனைக்குச் சொந்தமாகி இருக்கிறார் பாலாஜி மோகன். வெறும் 61 மணி நேரத்தில், அதாவது இரண்டரை நாட்களில் 3,862 கி.மீ தூரம் தன்னுடைய பைக்கில் பயணம் செய்துவிட்டுத் திரும்பிய எந்தக் களைப்பும்  இல்லை பாலாஜி மோகனிடம். இந்தியாவின் மிகக் கடினமான லே, லடாக் மலைப் பகுதியில் தனது ஹோண்டா CBR பைக்கை ஸ்டார்ட் செய்தவர், கன்னியாகுமரியில் இன்ஜின் ஆஃப் செய்து தனது பயணத்தை நிறைவு செய்திருக்கிறார். ‘‘என்னுடைய ஹோண்டா CBR 250R பைக்குக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன். ஐ லவ் மை CBR!’’ என்று தனது பைக்கைச் செல்லமாகத் தடவியபடி பேசுகிறார் பாலாஜி.

‘‘என்னுடைய பூர்விகம் சென்னை. 9 ஆண்டுகளுக்கு முன்பு வேலை நிமித்தம் சென்னையிலிருந்து பெங்களூரில் செட்டில் ஆகிவிட்டேன். ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக வர்த்தக ஆலோசகராகப் பணிபுரிந்து வருகிறேன். எல்லோருக்கும் முதல் ஹீரோ அப்பாதானே!? எனக்கும் அப்படித்தான்! என் அப்பா மூலமாகத்தான் எனக்குப் பயணங்களும் அறிமுகம். நான் முதன்முதலில் ஓட்டிய பைக், ஸ்ப்ளெண்டர். இப்போது மோட்டார் சைக்கிள் சாதனையாளராகும் அளவுக்கு உயர்ந்திருக்கிறேன். அப்பாவுக்கு எனது நன்றிகள். எனக்குப் பயணம் பற்றிச் சொல்லித் தந்தது அப்பா என்றால், வேகம் பற்றி எனக்குப் பாடம் எடுத்தது சென்னை ட்ரெக்கிங் கிளப். ஓகே. பயணத்துக்கு வருகிறேன்’’ என்றவர், தொடர்ந்து பேசினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick