பவர் க்விட் 1000 சிசி இஞ்சின்

ஃபர்ஸ்ட் டிரைவ், ரெனோ க்விட் 1.0 AMTதொகுப்பு: தமிழ்

ரெனோவின் க்விட், என்ட்ரி லெவல் ஹேட்ச்பேக் கார்தான். ஆனால், பயன்படுத்திப் பார்த்தவர்கள் இதை பிரீமியம் ஹேட்ச்பேக்குக்கு இணையாக சிலாகிப்பார்கள். சும்மாவா பின்னே? டச் ஸ்கிரீன், காற்றுப் பை, 300 லிட்டர் பூட் ஸ்பேஸ் என்று செடான் கார்களுக்கு இணையான வசதிகளில், முதல் கார் வாங்குபவர்களின் சாய்ஸாக இருக்கிறது க்விட். ஆனால் ஆல்ட்டோ, ஸ்விஃப்ட், ஃபிகோ போன்ற ஹேட்ச்பேக் ஓட்டியவர்கள், க்விட்டை விரும்பமாட்டார்கள். காரணம் - பெர்ஃபாமென்ஸ். இதன் 800 சிசி, 3 சிலிண்டர் இன்ஜின்... சாலையில் முயல் அல்ல; ஆமையாகத்தான் இருந்தது. இப்போது அந்தக் குறையைத் தீர்க்க வந்துவிட்டது, 1000 சிசி இன்ஜின். அதுவும் AMT கியர்பாக்ஸில். அப்புறம் என்ன? க்விட்டில் ஒரு க்விக் ரைடு.

ஸ்டைலிங்கில் எந்த மாற்றங்களும் கிடையாது. அதே பழைய க்விட்தான். பின்பக்கம் ‘Easy-R’ என்ற லோகோ இருந்தால், ‘ஓ... AMT-யா?’ என்று சாலையில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். அதாவது, ‘ஈஸியான டிரைவ்' என்கிறது ரெனோ.

இந்த AMT கியர்பாக்ஸ், வழக்கமாக ஆட்டோமேட்டிக் கார்களில் இருப்பதுபோல், டிரைவிங் மோடுகளை கியர் லீவர் மூலம் செலெக்ட் செய்வதுபோல் இல்லை. அதற்குப் பதிலாக, டேஷ்போர்டில் கியர் நாப் வடிவமைத்திருக்கிறார்கள். இதில் மூன்றே மூன்று மோடுகள். டிரைவிங், நியூட்ரல், ரிவர்ஸ். தனது ‘AMT’ கியர்பாக்ஸ் மேல் அதீத நம்பிக்கை வைத்திருக்கிறதோ என்னவோ, ரெனோ மேனுவல் ஆப்ஷன்கள் எதையும் இதில் தரவில்லை. ஓகே, AMT எப்படி இருக்கிறது?

வழக்கமான ஆட்டோமேட்டிக் கார்களில் இருக்கும் ‘க்ரீப் ஃபங்ஷன்’ இதில் இல்லை. இது நல்லதா, கெட்டதா? சிட்டி, நெடுஞ்சாலைப் பயணங்களில் இது மிகவும் கை கொடுக்கும். எப்படி? அதாவது, வழக்கமான ஆட்டோமேட்டிக் கார்களில், பிரேக்கில் இருந்து காலை எடுத்தால் போதும்... ஆக்ஸிலரேட்டரை மிதிக்காமலே கார் கொஞ்சம் கொஞ்சமாக முன்னோக்கி நகர்ந்து செல்லும். ஆனால், ஸ்டேபிளாக நிற்கிறது க்விட். அதாவது, டிரைவ் மோடில்கூட நியூட்ரலில் ‘கிச்’சென நிற்கிறது. ஆக்ஸிலரேட்டரை மிதித்தால் மட்டும்தான் வேகமெடுக்கிறது க்விட். இது சிட்டி டிரைவிங்குக்கு ஓகே. மலைச் சாலைகளில், சரிவான சாலைகளில் இது எந்தளவு எடுபடும்? கார், பின்னோக்கிக் கீழே இறங்க ஆரம்பிக்கிறது. ஆனால், இதில் மறைமுகமாக ஒரு நல்ல விஷயம் இருக்கிறது. பழைய மேனுவல் க்விட்டைவிட, AMT க்விட் மைலேஜ் வித்தியாசத்தில் பின்தங்கவில்லை. சொல்லப்போனால், மேனுவலைவிட 1 கி.மீ அதிகமாக, அதாவது நமது ஓட்டுதலுக்கு 24 கி.மீ மைலேஜ் கிடைத்தது. இதற்குப் பின்னால் பெரிய உழைப்பு இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick