இன்னும் புதுசா கொஞ்சம் பெருசா! - பவர்ஃபுல் ஃபார்ச்சூனர்...

ஃபர்ஸ்ட் டிரைவ், டொயோட்டா ஃபார்ச்சூனர்வேல்ஸ்

கொச்சியில் இருந்து இடுக்கி மாவட்டத்தில் இருக்கும் வாகமன்தான் புதிய ஃபார்ச்சூனரை டெஸ்ட் செய்வதற்காக நாம் சென்ற பாதை. வடகிழக்குப் பருவமழை கேரளாவுக்கு இல்லை என்றாலும், நாம் சென்ற நேரம் அங்கே மழை பெய்துகொண்டிருந்தது. நகர்ப்புறச் சாலை, வளைந்து நெளிந்து செல்லும் நெடுஞ்சாலை, ஆபத்தான மலைப் பாதை, மண் பாதை என்று சகலவிதமான பாதைகளிலும் புதிய ஃபார்ச்சூனரை ஓட்ட சந்தர்ப்பம் கிடைத்தது. கடந்த ஏழு ஆண்டுகளாக விற்பனையில் இருக்கும் ஃபார்ச்சூனர், அறிமுகமான நாள் முதலாக வெயிட்டிங் பீரியடில் விற்பனை ஆகும் கார். அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் இதற்கு வரவேற்பு உண்டு. அதனால், தனது பலம் என்று நினைக்கக்கூடிய எதிலும் டொயோட்டா கை வைக்கவில்லை. ஃபார்ச் சூனருக்கு என்று இருக்கும் வழக்கமான அத்தனை பலங்களும் புதிய ஃபார்ச்சூனரிலும் தொடர்கின்றன. அத்துடன் கூடுதலாக இது பல வகைகளிலும் மேம்படுத்தப்பட்டிருப்பதைப்பார்க்க முடிகிறது.

பார்வைக்கு

பழைய ஃபார்ச்சூனருக்கும் புதிய ஃபார்ச்சூனருக்கும் இடையே ஏராளமான வித்தியாசங்களைப் பார்க்க முடிகிறது. ‘மொழுக்’ என்று இருந்த இடங்கள் எல்லாம் இப்போது ஷார்ப்பாக மாறியிருக்கின்றன. பழைய ஃபார்ச்சூனரைவிடவும் இது பிரமாண்டமாகத் தெரிகிறது. காரணம், உயர்த்தப்பட்டிருக்கும் இதன் பம்பர் லைன், ஸ்லிம்மாக இருக்கும் ஹெட்லைட்ஸ் ஆகியவை நாளைய ஸ்டைலை இன்றைக்கே கொண்டுவந்துவிட்டதைப்போல இருக்கிறது. விலை உயர்ந்த கார் என்பதை ஊருக்கும் உலகுக்கும் பிரகடனப்படுத்துவதைப்போல, காரின் வெளிப்புறத்தில் பல இடங்களில் குரோம் பூச்சுக்களைப் பார்க்க முடிகிறது.

உள்ளலங்காரம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick