ஹூண்டாயின் அடுத்த சரவெடி - பாஸாகுமா டூஸான்?

ஃபர்ஸ்ட் டிரைவ், ஹூண்டாய் டூஸான்வேல்ஸ் படங்கள்: கே.ராஜசேகரன்

சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2005-ம் ஆண்டு ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி காரை அறிமுகம் செய்தது. அந்தச் சமயம், இதற்குப் போட்டியாக இருந்த ஒரே கார், ஹோண்டா CR-V. ஹோண்டா என்கிற பந்தாவான பெயர்; டூஸானைவிடவும் குறைவான விலை ஆகிய இரண்டு காரணங்களால், டூஸான் அப்போது எடுபடவில்லை. இது விற்பனையில் இருந்த ஐந்து ஆண்டுகளில் 2,000-க்கும் குறைவான எண்ணிக்கையிலேயே விற்பனையானது. ஆனால், இப்போது காலம் வெகுவாக மாறிவிட்டது. கார் நிறுவனங்கள் அனைத்தும் எஸ்யூவி கார் உற்பத்தியில் கவனம் செலுத்தும் அளவுக்கு, இந்த செக்மென்ட் வளர்ச்சியடைந்து வருகிறது. எஸ்யூவி என்றால், பிரமாண்டமாக இருக்க வேண்டும்; லேடர் ஆன் சேஸி அமைப்பில் வடிவமைக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்ற எண்ணங்கள் மறைந்து, எஸ்யூவி கார்கள் பல அளவுகளில் வர ஆரம்பித்து விட்டன. இந்த மார்க்கெட்டில் க்ரெட்டா வாயிலாக அழுத்தமாக கால் பதித்திருக்கும் ஹூண்டாய், க்ரெட்டாவைவிட பெரிய, ஆனால் சான்டா ஃபீ காருக்குச் சற்றே சிறிய அளவிலும் விலையிலும் ஒரு எஸ்யூவிக்குத் தேவை இருப்பதை உணர்ந்து கொண்டு, டூஸானை அறிமுகப்படுத்தி யிருக்கிறது.

வெளித்தோற்றம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick