இந்தியாவின் வேகமான ஹேட்ச்பேக்!

ஃபர்ஸ்ட் டிரைவ் , ஃபோக்ஸ்வாகன் GTIதொகுப்பு: தமிழ்

‘இந்தியாவின் அதிவேக ஹேட்ச்பேக் கார் எது?’ என்று கேட்டால், இந்த நிமிடம் வரை ஃபியட் புன்ட்டோ அபார்த் உரிமையாளர்கள்தான் கை தூக்குவார்கள். இனி அந்தப் பெருமை, ஃபோக்ஸ்வாகன் GTI உரிமையாளர்களுக்குச் செல்கிறது. அபார்த்துக்குப் போட்டியாக செம பவர்ஃபுல்லாக, செம ஃபன்னாக, அதே நேரத்தில் செம காஸ்ட்லியாகவும் வந்திறங்கி இருக்கிறது ஃபோக்ஸ்வாகன் GTI. அபார்த் புன்ட்டோவில் இருப்பது 145bhp பவர் அளிக்கும் இன்ஜின். GTI-ல் இருப்பது 192bhp பவர்கொண்ட இன்ஜின். வெறும் 1,273 கிலோ கொண்ட, ஒரு சப் 4-மீட்டர் ஹேட்ச்பேக் காருக்கு, இந்த பவரைக் கற்பனை செய்து பாருங்கள். GTI-ல் அப்படி என்னதான் ஸ்பெஷல்?

சந்தேகமே இல்லை. இன்ஜின்தான் GTI காரின் ஸ்பெஷல். முதலில் ஒரு விஷயத்தை நன்கு கவனியுங்கள். இது ஃபோக்ஸ்வாகன்தான்; பார்ப்பதற்கு போலோ மாதிரி இருக்கிறதுதான். ஆனால், இது போலோ இல்லை. அதாவது, போலோ ஸ்டிக்கர் இதில் மிஸ்ஸிங். ‘அப்படியென்றால், GTI பேட்ஜ் ஒட்டப்பட்ட போலோவா’ என்றால், அதுவும் இல்லை. அதேபோல், போலோவில் இருந்த இரண்டு கதவுகளும் இதில் மிஸ்ஸிங். ஆம், GTI, ஸ்மார்ட்டான இரண்டு கதவுகள் மட்டுமே கொண்ட கார். பெர்ஃபாமென்ஸ் கார்களின் டிரேட் மார்க் சிம்பல், இந்த ‘டூ டோர்’ கான்செப்ட். ஒரு டோரைத் திறந்து பின் பக்கத்தை அடைவது எளிதுதான். ஆனால், இந்தக் கதவுகளைத் திறக்கும்போது, அதிக இடம் தேவைப்படுவதால், நெருக்கமான பார்க்கிங் ஸ்லாட்டில் ஏறி இறங்குவது சிரமம்.

உற்றுப் பார்த்தால், போலோவுக்கும் இதற்கும் நிறைய வித்தியாசங்களைக் கண்டுபிடிக்கலாம். புதிய கிரில், LED ஹெட்லைட்ஸ், ரீ-டிஸைன்டு டெயில் லைட், இரட்டை எக்ஸாஸ்ட், 16 இன்ச் டயர்கள் என்று எல்லாமே புதுசு. ஐரோப்பா GTI-ன் 17 இன்ச் டயர்கள், ஆப்ஷனலாகவும் கிடைக்கின்றன. டேஷ்போர்டு லே-அவுட், சுவிட்ச் கியர் போலோவில் பார்த்ததுபோல் இருந்தாலும், நீங்கள் டிரைவர் சீட்டில் அமர்ந்து இதன் ஃப்ளாட் பாட்டம் ஸ்டீயரிங்கைப் பிடிக்கும்போதே, இது போலோ இல்லை என்கிற உணர்வு ஏற்பட்டுவிடும். புதிய இன்ஃபோடெய்ன்மென்ட் சிஸ்டம், இன்ஸ்ட்ரூமென்ட் டயல்கள், ‘ஹலோ நான் புதுசு’ என்கின்றன. இதன் ‘டர்டன்’ ஃபேப்ரிக் சீட்கள், வளைவுகளின்போது பாடி ரோல் ஏற்படாத வண்ணம் கிரிப்பாகப் பிடித்துக் கொள்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick