ரொமான்ஸ் ரைடு!

ஃபர்ஸ்ட் டிரைவ், மெர்சிடீஸ் பென்ஸ் C 300 கேப்ரியோலேதொகுப்பு: தமிழ்

‘மீசை வெச்சா இந்திரன்; மீசை இல்லேன்னா சந்திரன்’ என்ற ரஜினி படம் மாதிரி, டாப் ரூஃப் இருந்தால் ‘C’ க்ளாஸ், ஓப்பனாக இருந்தால் ‘கேப்ரியோலே’. பென்ஸ் C க்ளாஸ் காரைப் பற்றி இப்படித்தான் எளிமையாகச் சொல்ல வேண்டும். தற்போது விற்பனையில் இருக்கும் பென்ஸ் ‘C’ க்ளாஸின் கன்வெர்ட்டிபிள் வெர்ஷனாக வந்திருக்கிறது மெர்சிடீஸ் பென்ஸ் C 300 கேப்ரியோலே. கேப்ரியோலே என்றால், மடிக்கக்கூடிய டாப் ரூஃப் கொண்ட கார் என்று அர்த்தம்.

என்னதான் ‘C’ க்ளாஸின் கன்வெர்ட்டிபிள் வெர்ஷன், அதே பிளாட்ஃபார்ம் என்றாலும் ‘C’ க்ளாஸ் செடானுக்கும் கேப்ரியோலேவுக்கும் வித்தியாசங்களும் உண்டு. முதலில், ரூஃபில் இருந்து ஆரம்பிக்கலாம். இதன் ரூஃப், அழகாக மடிந்து காரின் மீது படிவதை உட்கார்ந்து ரசிக்கலாம். இதன் இன்ஜினுக்கு மட்டுமில்லை; ரூஃப்-க்குக்கூட பெர்ஃபாமென்ஸ் இருக்கிறது. மணிக்கு 50 கி.மீ வேகத்தில் செல்லும்போதுகூடே இந்த ரூஃப்-ஐ இருபதே விநாடிகளில் திறக்கவோ மூடவோ முடியும். மல்ட்டி லேயர் ஃபேப்ரிக் கொண்ட இந்த ரூஃபில் சவுண்ட் இன்சுலேட்டிங் மெட்டீரியல் இருப்பதால், கேபினுக்குள் வெளிசத்தத்தைக் கடத்தவில்லை. அதிக வேகங்களில் காற்றின் ஓசைகூட இல்லை. இந்த ஃபேப்ரிக் ரூஃப், நான்கு கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. காரின் கலருக்குத் தகுந்தாற்போல இதை நாம் தேர்வுசெய்து கொள்ளலாம்.

காரின் பின் பக்க சீட்டுகளுக்குப் பின்னால் இருக்கும் ஸ்பாய்லரை ‘Air Cap’ என்று செல்லமாக அழைக்கிறது மெர்சிடீஸ். கேபினில் இருப்பவர்களை காற்று தொந்தரவு செய்யாமல் இருக்க இது உதவுவதால், இதற்கு இப்படிப் பெயர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick