மலைக்க வைக்கும் விலையில் மான்ட்டெரோ!

ஃபர்ஸ்ட் டிரைவ், மிட்சுபிஷி மான்ட்டெரோதொகுப்பு: ராகுல் சிவகுரு

மிட்சுபிஷி மான்ட்டெரோ... ஆஃப் ரோடு திறனுக்கும், முரட்டுத்தனமான தோற்றத்துக்கும் பெயர்பெற்ற எஸ்யூவி.  குறைவான விற்பனை காரணமாக, கடந்த 2012-ல் இந்தியாவில் இதன் விற்பனையை நிறுத்திய மிட்சுபிஷி, தற்போது அதனை பிரீமியம் விலையில் மறுஅறிமுகம் செய்துள்ளது.

டிஸைன் & சிறப்பம்சங்கள்

மிட்சுபிஷியின் புகழ்பெற்ற பஜேரோ தொடங்கி மான்ட்டெரோ வரையிலான எஸ்யூவிகளின் ஸ்பெஷலே, அதன் க்ளாஸிக்கான டிஸைன்தான். எனவே, காரின் முன்பக்கம் - பின்பக்கத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், சுமார் 15 ஆண்டுகளாக இந்த அடிப்படைத் தோற்றத்துடன்தான் மிட்சுபிஷியின் எஸ்யூவிகள் விற்பனையில் இருக்கின்றன. மான்ட்டெரோவின் கிரில்லைக் கூர்ந்து கவனித்தால், சின்ன ஏர் வென்ட்கள் இருப்பது தெரியும். இவற்றின் முக்கியமான பணி  - இன்ஜினுக்கு சமமான அளவில் காற்றை அனுப்பி குளிர்விப்பதுதான்.

மான்ட்டெரோவின் முன்பக்கத்தில் பளபளப்பாக இருக்கும் ஹெட்லைட்ஸ், High Discharge Output வகையைச் சேர்ந்தவை. தவிர ஹெட்லைட் வாஷர், கேமராவால் கன்ட்ரோல் செய்யப்படும் ஆட்டோமேட்டிக் ஹை-பீம் வசதி என இவை அசத்துகின்றன. இது தவிர ஏர்டேம், முன்பக்க பம்பர், DRL எனப்படும் ‘டே டைம் ரன்னிங் லைட்ஸ்’ உடனான பனி விளக்கு ஆகியவற்றின் வடிவமைப்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ரியர் வியூ மிரர்களில் செய்யப்பட்டுள்ள க்ரோம் வேலைப்பாடுகளைத் தவிர, மான்ட்டெரோவின் பக்கவாட்டுத் தோற்றத்தில் மாறுதல் இல்லை. டெயில்கேட்டின் உயரத்தின் முன்பைவிடச் சின்ன அளவில் வித்தியாசம் தெரிவதுடன், ஸ்பேர் வீலின் மேல் பனி விளக்கு ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது. இதனுடன் பின்பக்கக் கதவுக்கும் வார்னிங் உடனான லாக்கிங் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick