காஸ்ட்லி காட்டுப்பூனை!

ஃபர்ஸ்ட் டிரைவ், ஜாகுவார் F-Pace R-Sportதொகுப்பு: தமிழ்

ஜாகுவார் கார்கள் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம். அப்படிப்பட்ட ஜாகுவாரில் இருந்து முதல் எஸ்யூவியாக வெளிவந்திருக்கிறது F-Pace. XE, XF கார்கள் தயாரிக்கப்படும் அதே பிளாட்ஃபார்மில் உருவாகியிருக்கிறது. முழுக்க முழுக்க அலுமினியத்தால் தயாரிக்கப்பட்டு இருப்பதால், கெர்ப் வெயிட் அதிகம் இல்லை. ஜாகுவாரின் ஸ்பெஷலே - அதன் DRLதான். இதிலும் ஜாகுவாரின் ஃபெமிலியரான ‘ஜே பிளேடு’ DRL மற்றும் ஹெட்லைட்டுகளையும், க்ரோம் மெஷ் கிரில்லையும் பார்த்தாலே ‘ஐ...ஜாகுவார்’ என்று கத்திவிடுவார்கள். பின்பக்கம் ‘F’ டைப்பை நினைவுபடுத்துகிறது. 19 இன்ச் வீல்கள், அதிகமான கிரவுண்ட் கிளியரன்ஸ், சன் ரூஃப்... சந்தேகமின்றிச் சொல்லலாம் - ‘ஹேய்.. யு ஆர் எ ஹேண்ட்ஸம் லுக்கிங் எஸ்யூவி!’

சின்ன எஸ்யூவிதான் என்பதால்,  ஐந்து பக்கா இருக்கைகள்தான். ஸ்டீயரிங் வீல் பிடிக்கும்போதே கெத்து ஏற்படும் அதேசமயம், ஏகப்பட்ட கன்ட்ரோல் பட்டன்கள் இருப்பதால், கொஞ்சம் நெர்வஸ் ஆகவே இருக்கிறது. 12.3 இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், மெரீடியன் ஆடியோ சிஸ்டம் அனுபவிக்கவே சுகம். உள்ளே ஏ..சி வென்ட்களை உற்றுக் கவனித்தால், ஒரு விஷயம் புலப்படுகிறது - டாடா டியாகோவை நினைவுபடுத்துகின்றன இதன் வென்ட்கள். அதாவது, டியாகோவுக்கு ஜாகுவாரை இன்ஸ்பிரேஷனாகக் கொண்டு ஏ.சி வென்ட் வடிவமைத்திருக்கிறார்கள். மற்றபடி, F-Pace விண்டோ பட்டன் போன்றவற்றில் லேண்ட்ரோவரின் தாக்கம் தெரிகிறது. ஜாகுவாரில் இருந்து முதல் எஸ்யூவி - ஏதாவது ஸ்பெஷல் இருந்தாக வேண்டுமே...  எல்லாமே இருக்கிறது.

காரை ரிவர்ஸ் எடுக்கும்போது, பார்க் செய்யும்போது, கேமரா மற்றும் பார்க்கிங் சென்ஸார்களோடு ஃப்ரன்ட் கேமராவும் இருக்கிறது. ‘முன்பக்கத்துக்கு எதுக்கு கேமரா?’ என்கிறீர்களா? டிரைவர் சீட்டிலிருந்து சாலை தெளிவாகத் தெரிந்தாலும், முன் பக்க டயர்களுக்குப் பக்கத்தில் இருக்கும் சர்ஃபேஸ், நமக்கு ப்ளைண்ட் ஸ்பாட்தான். F-Pace-ல் கீழே இருக்கும் சர்ஃபேஸ், அத்தனை தெளிவாக நம் கண்களுக்குப் புலப்படுகிறது. பின்பக்கப் பயணிகளுக்குத் தனித்தனியாக ஏ.சி கன்ட்ரோல் பட்டன்கள் இருப்பதால், பயணிகள் கம்ஃபர்ட்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick