ஏறும் வரை ட்ரக்... ஏறிய பின் கார்!

ஃபர்ஸ்ட் டிரைவ், இசுஸூ D-மேக்ஸ் V-க்ராஸ் பிக்-அப் ட்ரக்தமிழ் / படங்கள்: மீ.நிவேதன்

‘கார் செமையா இருக்குல்ல’ என்று முன்பக்கம் பார்ப்பவர்கள், அப்படியே பின்பக்கம் பார்வையை ஓட்டினால், ‘அட.. லோடு வண்டி’ என்று வியக்கிறார்கள். ‘லோடு வண்டிதானா’ என்று சாதாரணமாகக் கடந்து போகாமல், ‘ட்ரக்கா இவ்வளவு அழகா இருக்கு’ என்று வியப்பதற்குக் காரணம், ஜப்பானின் இசுஸூ. எஸ்யூவி போலவே டிஸைன் செய்யப்பட்டிருக்கும் இசுஸூவின் D-மேக்ஸ் V-க்ராஸ் பிக்-அப் ட்ரக்... இன்டீரியர், டிரைவிங், கையாளுமை, கிரவுண்ட் கிளியரன்ஸ் என்று எல்லாவற்றிலுமே பக்கா எஸ்யூவியாகவே இருக்கிறது. 4 வீல் டிரைவ் ட்ரக்கான இசுஸூவின் D-மேக்ஸ் V-க்ராஸை, ஒரு சாயங்கால வேளையில் பீச்சுக்குள் செலுத்தினோம்.

டிஸைன், உள்ளே...

முழுக்க முழுக்க பிக்-அப் ட்ரக்குகளைப் போட்டியாக மனதில் வைத்தே V-க்ராஸை டிஸைன் செய்திருக்கிறது இசுஸூ டிஸைன் டீம். ஏற்கெனவே விற்பனையில் இருக்கும் D-மேக்ஸ் ட்ரக்கை, அல்ட்ரா மாடர்னாக ஆல்டர் செய்து வந்திருப்பதுதான் D-மேக்ஸ் V-க்ராஸ். D-மேக்ஸில் புத்தம் புதிய ஸ்ட்ராங்கான சேஸி. பிக்-அப் ட்ரக் என்பதால், பில்டு குவாலிட்டி, கிரவுண்ட் கிளியரன்ஸ், 4-வீல் & 2-வீல் டிரைவிங் மோடுகள், ஹைட்ராலிக் ஸ்டீயரிங் என்று மெக்கானிக்கல் விஷயங்களில்தான் அதிகக் கவனம் செலுத்தியிருப்பது தெரிகிறது. இன்டீரியரைப் பொறுத்தவரை ஏ.சி, பவர் விண்டோஸ், ஸ்டீரியோ போன்ற அம்சங்களைத் தவிர பெரிதாக எலெக்ட்ரானிக்கல் விஷயங்களில் மெனக்கெடவில்லை. ஆனால், இதைக் குறையாகச் சொல்ல முடியாது. இத்தனைக்கும் நமக்கு வந்த மாடலில் ஸ்டீரியோகூட இல்லை. ஆனால், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல்கள் உள்ளன. ஜப்பான் கார் மேக்கர் என்பதாலோ என்னவோ... ஏ.சி நாப்கள் - நிஸான் சன்னி, மைக்ரா போன்ற கார்களை நினைவூட்டுகின்றன.  பின்னால் உள்ள டெக்கில் (Deck) கிட்டத்தட்ட 265 கிலோ லோடு ஏற்றலாம் என்கிறது இசுஸூ. இதுபோக, உள்ளே 5 பேர் தாராளமாக உட்கார முடிகிறது. கதவுகள், விண்டோஸ் போன்றவற்றின் ஃபிட் அண்டு ஃபினிஷ், பெரிய செவர்லே கார்களுக்கு இணையாக இருக்கிறது. இதற்கும் காரணம் இருக்கிறது. ட்ரெய்ல்பிளேஸரின் பிளாட்ஃபார்மில்தான் D-மேக்ஸும் தயாரிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick