மக்கள் கார்!

பழைய கார், மாருதி ஆல்ட்டோ 800ராகுல் சிவகுரு

மாருதி சுஸூகி ஆல்ட்டோ, விற்பனைக்கு வந்து 16 ஆண்டுகள் ஆகின்றன. கடந்த 2000-ஆவது ஆண்டில் அறிமுகமான முதல் தலைமுறை ஆல்ட்டோ, சின்னச் சின்ன மாற்றங்களுடன் 2012 வரை விற்பனையானது. இதனைத் தொடர்ந்து வந்த இரண்டாவது தலைமுறை ஆல்ட்டோ வரலாற்றுச் சிறப்புமிக்க மாருதி 800 காரின் இடத்தை நிரப்பும் விதமாக, ஆல்ட்டோ 800 என்ற பெயரில் களமிறங்கியது. பழைய காருடன் ஒப்பிடும்போது, பெர்ஃபாமென்ஸ் மற்றும் ஓட்டுதலில் முன்னேற்றம் கண்டிருந்ததால், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பட்ஜெட் காம்பேக்ட் ஹேட்ச்பேக் காராக இது மாறியதில் ஆச்சரியம் இல்லை. ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஆல்ட்டோ 800, இந்த ஆண்டு மே மாதத்தில் அறிமுகமாகிவிட்டது. எனவே, 2012 தொடங்கி 2015 வரையிலான காலத்தில் விற்பனை செய்யப்பட்ட ஆல்ட்டோ 800 காரை, யூஸ்டு கார் மார்க்கெட்டில் வாங்குவது சரியான முடிவாக இருக்கும். சுமார் இரண்டு லட்ச ரூபாயில் இருந்து கிடைக்கும் இந்த கார், மிடில் கிளாஸ் குடும்பங்களுக்கு ஏற்ற காராகத் திகழ்கிறது.

ஓட்டுதல் அனுபவம்

மாருதி 800 தொடங்கி இரண்டாம் தலைமுறை ஆல்ட்டோ 800 காரிலும் இருப்பது, அதே 796சிசி - 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின்தான். BS-IV மாசுக் கட்டுப்பாடு விதிகளுக்கு ஏற்ப செயல்படும் இந்த இன்ஜின், முதல் தலைமுறை ஆல்ட்டோவில் இருந்ததைவிட ரெஸ்பான்ஸிவாக இருக்கிறது. எனவே, நெரிசல்மிக்க நகர டிராஃபிக்கில் இந்த காரை ஓட்டுவது நல்ல அனுபவமாக இருக்கிறது. இன்ஜின் நன்கு ரெவ் ஆவதுடன், பவர் டெலிவரியும் பெப்பியாக இருக்கிறது. ஆனால், அதிக வேகங்களில் செல்லும்போது, இன்ஜின் சத்தம் காருக்குள் கேட்பது நெருடல். ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமையைப் பொறுத்தவரை, மிதமான வேகங்களில் செல்லும்போது, காரின் சஸ்பென்ஷன் சிறப்பாகச் செயல்படுகிறது. பிரேக்ஸ் ஷார்ப்பாக இருப்பது ப்ளஸ்.

என்ன கவனிக்க வேண்டும்?

பொதுவாகவே மாருதி சுஸூகியின் கார்கள், நம்பகத்தன்மைக்கும், குறைவான பராமரிப்புச் செலவுகளுக்கும் பெயர் பெற்றவை. யூஸ்டு கார் மார்க்கெட்டில் ஆல்ட்டோ காரை வாங்குவதற்கு முன்பாக, அந்த காரில் இருக்கும் சில பிரச்னைகளைப் பார்ப்போம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick