எந்திரன் - 24 | Enthiran - Car Spare parts - Motor Vikatan | மோட்டார் விகடன்

எந்திரன் - 24

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
பாதுகாப்பு... பயணம்!தொடர், தொழில்நுட்பம்தொகுப்பு: பரணி ராஜன்

வாகனம் ஓட்டும்போது, வீல்களை எளிதாகத் திருப்ப உதவும் அமைப்பு, ஸ்டீயரிங். வாகனத்தில் உட்காரும்போது, நமது முதல் உறவே ஸ்டீயரிங் வீலுடன்தான் தொடங்குகிறது. நமது கைகளின் இயக்கத்துக்கேற்ப ஸ்டீயரிங் வீல் வலமும், இடமும் திரும்புகிறது. ஸ்டீயரிங் வீலின் திருப்பத்திற்கேற்ப  வீல்களும் திரும்பும். இந்த மொத்த அமைப்பும் சேர்ந்ததுதான் ஸ்டீயரிங் சிஸ்டம். இது, இரு வெவ்வேறு மெக்கானிசங்களில் இயங்குகிறது. அவை ரேக் மற்றும் பினியன் அமைப்பு மற்றும் ரீசர்குலேட்டிங் பால் அமைப்பு

ரேக் மற்றும் பினியன் அமைப்பு (Rack and pinion system)

பெரும்பாலான கார்கள், டிரக்குகள் மற்றும் எஸ்யூவிகளில் இந்த வகை ஸ்டீயரிங் சிஸ்டம்தான் உபயோகப்படுத்தப்படுகிறது. இதில் ஸ்டீயரிங் வீல், ஒரு யுனிவர்சல் ஜாயின்ட்டுடனும்(Universal Joint) ஸ்டீயரிங் காலம் உடனும்(Steering column) இணைக்கப்பட்டுள்ளது. ஸ்டீயரிங் காலத்தின் மறுமுனையில் ஒரு சின்ன பினியன் கியர் (Pinion Gear) உண்டு. இந்த பினியன் கியர், ஒரு நீளமான ரேக்(Rack) கியரின் மேல் (மெஷ்-mesh) இணைந்திருக்கும். ரேக் மற்றும் பினியன் இரண்டும் ஒரு உலோகக் குழாயினுள் மூடி வைக்கப்பட்டிருக்கும். ரேக் கியர் என்பது நீளமான குழாய் போன்ற அமைப்பு. அதன் இரு முனைகளும் ‘டை ராடு’களுடன்(Tie Rods) பிணைக்கப்பட்டுள்ளன. இரண்டு டை ராடுகளின் மறுமுனைகள் ஸ்டீயரிங் ஆர்ம் மூலமாக வாகனத்தின் முன் பக்க வீல்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. ஸ்டீயரிங் வீலை நாம் சுழற்றும்போது, இந்தச் சுழற்சி யுனிவர்சல் ஜாயின்டுகள் மூலம் ஸ்டீயரிங் காலத்துக்குக் கடத்தப்பட்டு, ஸ்டீயரிங் காலத்தின் மறுமுனையில் இருக்கும் பினியன் கியர் இதன் மூலம் சுழல ஆரம்பிக்கும். பினியன் கியரின் ஒவ்வொரு சுற்றும், அதனுடன் பிணைந்திருக்கும் ரேக் கியரை இடவலமாக நகர்த்த ஆரம்பிக்கும். இவ்வாறு நகரும் ரேக் கியரின் இயக்கம், டை ராடுகள் மூலமாக வீல்களை அடைந்து அவற்றை ஸ்டீயரிங் வீலின் இடவலத் திருப்பலுக்கு ஏற்றாற்போலத் திருப்பும்.

ரீசர்குலேட்டிங் பால் அமைப்பு (Recirculating ball system)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick