இந்தியாவில் கால் பதிக்கிறது கியா!

தென் கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் நிறுவனத்தின் ஓர்அங்கமான கியா மோட்டார்ஸ், இந்திய கார் சந்தையை நீண்ட நாட்களாகக் கவனித்துவருகிறது. இந்தியாவில் கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை, வரும் 2020-க்குள்ளாக ஆண்டுக்கு 50 லட்சம் என்ற எண்ணிக்கையைத் தொடும் எனப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, ஹூண்டாய் கார்களை அடிப்படையாகக் கொண்டு, அனைத்து வகை வாகனங்களையும் தயாரித்து வரும் கியா, இந்தியாவுக்கு ஏற்ற கார்களைத் தயாரிக்க இருக்கிறது. கார் உற்பத்தி ஆலையைத் தொடங்குவதற்காக தமிழ்நாடு, ஆந்திரா, குஜராத், மஹாராஷ்ட்ரா, மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைப் பரிசீலித்துவரும் கியா, ஆந்திராவைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. ஏனெனில், ஹூண்டாயின் கார் தயாரிக்கும் தொழிற்சாலை சென்னையில் அமைந்திருப்பதுடன், ஆந்திரா அருகே இருப்பது அதற்கு வலு சேர்க்கிறது. ஆண்டுக்கு 6.80 லட்சம் கார்களைத் தயாரிக்கும் திறன்படைத்தது, ஹூண்டாயின் சென்னை தொழிற்சாலை. எனவே, உலகளவில் போட்டியாளர்களாக இருக்கும் ஹூண்டாய் மற்றும் கியா, இந்தியாவில் கூட்டணி அமைத்துச் செயல்படும். கியா துவங்கப் போகும் கார் தொழிற்சாலை, ஆண்டுக்கு மூன்று லட்சம் கார்களைத் தயாரிக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என்பதால், கியா கார்களுக்கான டிமாண்ட் ஏற்படும் வரை, அந்தத் தொழிற்சாலை ஹூண்டாய் நிறுவனத்துக்கு உதவியாக இருக்கும். ஹூண்டாய் கார்களுக்கு உதிரிப் பாகங்கள் சப்ளை செய்பவர்களே கியா நிறுவனத்துக்கும் வழங்குவார்கள் என்பதால், ஒரே பிளாட்ஃபார்ம், இன்ஜின் ஆப்ஷன் என இரண்டு நிறுவனத் தயாரிப்புகளிடையே பின்னாளில் ஒற்றுமைகள் அதிகமாக இருக்கும். தவிர, உள்நாட்டிலேயே கார்கள் தயாரிக்கப்படுவதால், உற்பத்திச் செலவுகள் குறைவாகவே இருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick