மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

நான் புதிய பைக் வாங்கத் திட்டமிட்டுள்ளேன். அப்பாச்சி RTR 160 பைக்கின் பெர்ஃபாமென்ஸ் எனக்குப் பிடித்திருக்கிறது. ஆனால், என் நண்பர்கள் பல்ஸர் அல்லது யூனிகார்ன் வாங்கச் சொல்கிறார்கள். எனக்கான தெளிவான பதிலைத் தாருங்கள்.

- அஸ்வத், இமெயில்.


நீங்கள் கூறியதில் டிவிஎஸ் அப்பாச்சி 160 பைக்தான் பவர்ஃபுல் பைக். எனவே, எதிர்பார்த்ததுபோலவே அதன் பெர்ஃபாமென்ஸ் நன்றாகவே இருக்கிறது. பைக்கின் டிஸைனும், கையாளுமையும் ஸ்போர்ட்டியாகவே இருக்கிறது. ஆனால், இதிலுள்ள டயர்களின் கிரிப் சுமார் என்பதுடன், மிதமான வேகத்தை எட்டும்போது பைக்கில் அதிர்வுகளை உணர முடிகிறது. மேலும் இதன் கட்டுமானத் தரம், ஜப்பானிய பைக்குகளுடன் ஒப்பிடும் அளவில் இல்லை.

அதிகம் விற்பனையாகும் பைக்குகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ள பல்ஸர் 150 டிஸைன், காலத்துக்கு ஏற்ப அப்டேட்டாக இல்லை. ஆனால், குறை சொல்ல முடியாத பெர்ஃபாமென்ஸ், மைலேஜ், கையாளுமை, பராமரிப்புச் செலவு, சிறப்பம்சங்கள் என பிராக்டிக்கலான பைக்காக இருக்கிறது. மேலும், இளைஞர்கள் மட்டுமின்றி நடுத்தர வயதினரும் இந்த பைக்கைப் பயன்படுத்தும் வகையில் இருக்கிறது. இவற்றுக்குப் போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்ட யூனிகார்ன் 150 - ஸ்டைல் மற்றும் பெர்ஃபாமென்ஸில் அனைவரையும் ஈர்க்காது. ஆனால், சொகுசான பயணத்துக்கு உத்தரவாதம் தரும் வகையில் இதன் சஸ்பென்ஷன், இருக்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலே குறிப்பிட்ட பைக்குகளைவிட இதன் எடை அதிகம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick