சொந்த பைக் இல்லாத பைக் ரேஸர்! - ஸ்ருதி நாகராஜன்

பைக் ரேஸர் , ஹோண்டா ரேஸிங் டீம்தமிழ் / படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

‘‘எல்லாரும் மூணு வயசுல இருந்து பைக் ஓட்டுறவங்க... கிட்டத்தட்ட பத்துப் பதினஞ்சு வருஷ எக்ஸ்பீரியன்ஸ்... உனக்கோ, இது அஞ்சாவது ரேஸ்; லேப்-பாவது ஃபினிஷ் பண்ணிட்டு வா! எலிமினேட் ஆயிடாத!’’ என்று கிளம்பும்போது தூர நின்று அறிவுரை சொன்னவர்கள், இப்போது, ‘‘கலக்கிட்ட ஸ்ருதி... இந்தியாவுக்கே உன்னால் பெருமை!’’ என்று பக்கம் வந்து கை குலுக்குகிறார்கள்.

சென்ற மாதம் தைவானில் நடந்த யமஹா 125 சிசி ஸ்கூட்டரின் ஒன்மேக் ரேஸ் பிரிவில், கார்களுக்கே கஷ்டமான ‘பென்பே’ ரேஸ் டிராக்கில், பல ரேஸ் ஜாம்பவான்களுடன் மோதி, தனது ஐந்தாவது ரேஸில் நான்காவது இடம் பிடித்து சென்னை திரும்பியிருக்கிறார் 22 வயது ஸ்ருதி. ‘‘ பொதுவா, இந்தியாவில் இருந்து ஆண்கள்தான் இதில் கலந்துக்குவாங்க. ஆனா, என் மேல நம்பிக்கை வெச்சு என்னை தைவானுக்கு அனுப்பிய FMSCI-க்கும், என்னோடா ஹோண்டா ரேஸிங் டீமுக்கும் பெரிய தேங்க்ஸ்!’’ என்று உற்சாகமாகப் பேச ஆரம்பிக்கிறார் ஸ்ருதி நாகராஜன்.

ஸ்ருதி, ரேஸரான கதையை நறுக்கென ஒன்லைனில் சொல்லிவிடலாம். ஆனால், பேட்டி என்றதும் பைக் ஓட்டுவதுபோல நான்-ஸ்டாப்பாக ‘வ்வ்வர்ர்ர்ரூம்’ ஸ்பீச் கொடுத்தார் ஸ்ருதி.

‘‘நான் முதன்முதலாக ஓட்டிய பைக், பேஸன் ப்ரோ. எனக்கு கியர் பைக் ஓட்டச் சொல்லிக் கொடுத்த பெருமை, எங்க சித்தப்பாவுக்குத்தான் சேரும். அப்போது நான் ஆறாம் வகுப்பு படிச்சிட்டிருந்தேன். அப்பவே எனக்கு ஸ்கூட்டர் ஓட்டணும்னு ஆசை. ஆசையைச் சொன்னதும், வீட்டில் வழக்கம்போல திட்டு. சித்தப்பாதான், ‘ஸ்கூட்டர் என்ன; பைக்கே ஓட்டச் சொல்லித் தர்றேன்டா செல்லம்’னு, கியர் பைக் ஓட்டச் சொல்லிக் கொடுத்தார். என்னால எங்க சித்தப்பாவுக்கும் திட்டு. ‘சரி; சும்மா ஜாலிக்குத்தானே ஓட்டுறா’னு வீட்ல அசால்ட்டா இருந்தாங்க. ப்ளஸ்-ஒன் படிக்கும்போது, பைக் மேல இருந்த வெறி, எனக்கு இன்னும் அதிகமாயிடுச்சு.

ஒருநாள் திடீர்னு அப்பாவோட ஸ்டார் சிட்டி பைக்கைக் காணோம்னு ஊரெல்லாம் தேடினாங்க. வீடு பரபரப்பா இருந்தைப் பார்த்துட்டு, ‘என்னாச்சு’னு நான் கூலா, டியூஷனில் இருந்து பைக்ல வந்ததைப் பார்த்ததும் எங்கப்பாவுக்கு செம டென்ஷன். பயங்கரமா திட்டு வாங்கினேன். ஆனா, நான் அதையெல்லாம் கண்டுக்கலை. அடிக்கடி பைக்கும் நானும் காணாமப் போக ஆரம்பிச்சோம். ‘உங்க பொண்ணை ரயில்வே கிரவுண்ட்ல பைக் ஓட்டுறதைப் பார்த்தோம்’னு யாராவது புண்ணியவானுங்க வீட்ல வந்து போட்டுக் கொடுக்க... வீட்ல என்னைப் போட்டு நிமிர்த்தி எடுக்க... ஆனாலும் எனக்கு பைக் ஆசை மட்டும் போகவே இல்லை. ‘பொண்ணுங்க பைக் ஓட்டுறதெல்லாம் சேஃப்டி இல்லைடா செல்லம்’னு அராஜகம் பண்ணாம, அன்பாவும் எனக்குப் பாடம் எடுத்துப் பார்த்தாங்க அம்மா-அப்பா. சாவியை எடுத்து ஒளிச்சும் வெக்க ஆரம்பிச்சாங்க.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick