ரீடர் ரெவ்யூ - ஹோண்டா பிஆர்-வி

ஹோண்டா பிஆர்-வி... பிடித்தது அதிகம்!ஆர்.குமரேசன் / படங்கள்: வீ.சிவக்குமார்

ன் சின்ன வயதில் இருந்தே கார் ஓட்டுகிறேன். எனக்கு கார் டிரைவிங் மிகப் பிடித்தமான பொழுதுபோக்கு. சொந்த ஊர் பட்டுக்கோட்டை. இப்போது திண்டுக்கல்லில் வசிக்கிறேன். விவசாயம்தான் என்னோட தொழில். கர்நாடக மாநிலம் கூர்க் மற்றும் கொடைக்கானலில் எங்களுக்கு எஸ்டேட் இருக்கின்றன. நான் அடிப்படையில ஒரு ரைடர். இதுக்கு முன்பு ரெனோ க்விட், அடுத்து எக்கோஸ்போர்ட் வைத்திருந்தேன். ஒரு விபத்தில் எக்கோஸ்போர்ட் சேதமாகிவிட்டது. அதனால், வேறு கார் வாங்கலாம் என யோசித்தபோது, என் டிரைவர் சொன்ன கார்தான் ஹோண்டா பிஆர்-வி.

ஏன் பிஆர்-வி?

மாதத்தில் 20 நாட்கள் டிராவலில்தான் இருப்பேன். இந்த நிலையில, என்னோட பிறந்தநாள் பரிசாக லாப்ரடோர் நாய்க் குட்டி பரிசாகக் கிடைத்தது. பிறந்து 23 நாட்கள் ஆன குட்டியாக அது என் கைக்கு வந்தது. அதை எப்போதும் என்னுடனே வைத்திருப்பேன். நான் பயணம் செல்லும்போது அதையும் என்னுடனே அழைத்துச் செல்வேன். என் தொழில் விவசாயம் என்பதால், அடிக்கடி பண்ணைக்குத் தேவையான பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டியிருக்கும். அதுனால், இடவசதி அதிகம் கொண்ட கார் வேண்டும் என்று நினைத்தேன். என்னுடைய பட்ஜெட்டில், அதிக இடவசதி உள்ள காராக பிஆர்-வி இருந்ததனால், அதைத் தேர்ந்தெடுத்தேன். கார் பின்சீட்டை மடக்கிவிட்டு, ஒரு பெட் போட்டு அதில் ‘டாலி’யை (வளர்ப்பு நாய்) படுக்க வைத்திருப்பேன். அது எப்போதும் காரிலேயேதான் இருக்கும். என்கூடவே பல ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்திருக்கிறது. இப்போது அதுக்கும் நீண்ட தூரப் பயணம் செல்வது மிகவும் பிடித்த விஷயமாகிவிட்டது. ஷோரூமில் இருந்து காரை டெஸ்ட் டிரைவுக்குக் கொண்டுவந்திருந்தார்கள். ஓட்டிப் பார்த்தேன்; என் எதிர்பார்ப்புகள், டிஸைன், பட்ஜெட் என எல்லாமே எனக்குப் பிடித்திருந்ததால், உடனே புக் செய்துவிட்டேன்.

ஷோரூம் அனுபவம்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick