ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப்

மீன் மணம் கமழும் முத்துப்பேட்டை தமிழ் / படங்கள்: க.சதீஷ்குமார்

காவிரியை விட்டுக்கொடுக்காத கர்நாடக அரசு மாதிரி, எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் தங்கள் சொந்த இனோவாவை விட்டுக்கொடுத்தே பேசமாட்டார்கள் அதன் உரிமையாளர்கள். அப்படித்தான் அறிவுராஜாவும். காட்டுமன்னார்கோவில் பகுதியில், இனோவா க்ரிஸ்டாவின் முதல் வாடிக்கையாளர் இவர்.

இந்த மாதம் ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப்பின்போது, ‘‘விலை டூ மச்தான்; ஆனா, ஃபார்ச்சூனரைவிட இடவசதி செமையா இருக்குல்ல! மைலேஜ் கம்மிதான்; ஆனா, ஓட்டுறதுக்கு ஜாலியா இருக்கே! எடை அதிகம்தான்; அதே நேரத்துல பவரையும் பாருங்க!’’ என்று தனது புதிய இனோவா க்ரிஸ்டாவை விட்டுக்கொடுக்காமல் பேசிக்கொண்டே வந்தார். இது போன்ற காதலர்கள் இருப்பதால்தான், டொயோட்டா விலையை உயர்த்தினாலும் மாதந்தோறும் கிட்டத்தட்ட 7,500 கார்கள் வரை விற்பனையாகிறது இனோவா.

177bhp பவர், 38 kgm டார்க், 7 காற்றுப் பைகள் என்று பழைய இனோவாவில் இருந்து புதிய க்ரிஸ்டா முற்றிலும் பயணத்தை செம ஃபன் ஆக்குகிறது. ஆனால், இதன் டாப் எண்ட் மாடலான 2.8 ஆட்டோமேட்டிக் வாங்கும் விலையில் எக்ஸ்ட்ராவாக 5 லட்சம் போட்டால்... எண்டேவர், ஃபார்ச்சூனர், ட்ரெயில் ப்ளேஸர் போன்ற படா கார்களே வாங்கிவிடலாம். ‘‘நான் பாண்டிச்சேரியில் புக் பண்ணினேன். 23 லட்சத்துல ஆன் ரோடு விலை முடிஞ்சுடுச்சு!’’ என்கிறார் அறிவுராஜா.

‘‘நான் கார் பிரியன் இல்லை; கார் வெறியன்!’’ என்று தன்னைப் பற்றி இன்ட்ரோ கொடுக்கும் அறிவுராஜா, சிறு வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டு, சரியாக நடக்க முடியாத நிலையில் இருப்பவர். இதை ஒரு பெரிய குறையாக எடுத்துக்கொள்ளாமல் தான் வளர்ந்தபிறகு இண்டிகா, இண்டிகோ, மான்ஸா, ஹோண்டா சிட்டி என்று மேனுவல் கார்களை ஓட்டியவர்.

இப்போதுதான் இனோவா ஆட்டோமேட்டிக்குக்குத் தாவியிருக்கிறார். ‘‘கால் சரியில்லைங்கிறதுக்காக சொல்லலை; சிட்டி டிராஃபிக்; ஹைவே பயணம் எதுவா இருந்தாலும்  பெஸ்ட் ஆட்டோமேட்டிக்தான். கிளட்ச் மிதிக்க, கியர் மாத்தத் தேவை இல்லை பாருங்க!’’ என்றார் அறிவுராஜா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick