கேட்ஜெட்ஸ்

டிஜிட்டல் உலகம், கேட்ஜெட்ஸ்கார்த்தி

Moto Z - Moto Z play

ஆன்லைன் மார்க்கெட்டில் தொடர்ந்து கொடிகட்டிப் பறப்பது ரெட்மி, லெனோவோ, அசூஸ் போன்கள்தான். ஸோனி, சாம்ஸங் போன்றவற்றைக்கூட இவை சாதாரணமாக ஓவர்டேக் செய்கின்றன. அதுவும் மோட்டோரோலோ நிறுவனத்தை லெனோவோ வாங்கியதில் இருந்து, அது மாதா மாதம் இரண்டு மோட்டோ மொபைல் மாடல்களை வெளியிட்டுவருகிறது. சில மாதங்களுக்கு முன்னர் 10,000 ரூபாய் பட்ஜெட்டில் வெளியான மோட்டோ e3,மோட்டோ g4 ப்ளே ஆகிய இரண்டுமே அதிரி புதிரி ஹிட். தற்போது, தனது பிரீமியம் வாடிக்கையாளர்களுக்கென மோட்டோ Z, மோட்டோ Z ப்ளே ஆகிய இரு மாடல்களை வெளியிட்டுள்ளது.

மொபைல்களில் தங்களை அப்டேட்டாக வைத்துக்கொள்ள நினைப்பவர்கள், தாராளமாக இந்த மொபைல்களைத் தேர்ந்தெடுக்கலாம். மொபைலில் எல்லாம் சாத்தியம் என்ற நிலையை நோக்கி, மொபைல் போன் நிறுவனங்கள் காய் நகர்த்திச் செல்கின்றன. அதை MODS சாத்தியப்படுத்துகின்றன (MOTO MODS மொபைலின் பின்பக்கத்தில் மேக்னெட்டுகளைப் பொருத்தி இருக்கிறார்கள். அதேபோல்,மோட்டோ மோட்ஸிலும் மேக்னெட்டுகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. மேக்னெட்டுகளின் மூலம் மோட்டோ மோட்ஸ்களை மொபைலோடு இணைப்பது மிகவும் எளிது. இந்த இணைப்பு கேமரா, ஸ்பீக்கர், புரொஜெக்டருக்கு; மோட்டோரோலா மோட்டோ மோட்ஸ் எனப் பெயரிட்டிருக்கிறார்கள்).

சில ஆண்டுகளுக்கு முன்பாகவே, சின்ன புரொஜெக்டருடன் ஒரு நிறுவனம் மொபைல் வெளியிட்டது. ஆனால், அது பெரிதாக மார்க்கெட்டில் செல்லுபடி ஆகவில்லை. சில மாதங்களுக்கு முன்பு LG நிறுவனமும் G5 மாடலில் MODS கான்செப்ட்டைக் கொண்டுவந்தது. தற்போது மோட்டோவும் அதைக் கையில் எடுத்திருக்கிறது. MODS பக்கம் போவதற்கு முன்பு, இரு மாடல்களின் ஸ்பெக்ஸையும் பார்த்துவிடுவோம்.

டூயல் சிம், டைப்-சி USB சார்ஜர், 5.5" AMOLED ஸ்கிரீன்,ஃபிங்கர் பிரின்ட் சென்ஸார் போன்றவை இரண்டுக்கும் பொது. இரண்டு மொபைல்களுக்கும் ஸ்டைல் மோட் எனும் பின்பக்க கவர் மொபைலுடன் தரப்படுகிறது. தனியாக நாம் மோட்டோ தரும் மோடுகளை வாங்க வேண்டும் என்றாலும், அது இல்லாவிட்டாலும், சிறப்பானதொரு எக்ஸ்பீரி யன்ஸையே இந்த இரு மொபைல்களும் தருகின்றன.

25,000 ரூபாய்க்குக் குறைவான பட்ஜெட்டில் மொபைல் வாங்க விரும்புபவர்களுக்கு, அட்டகாசமான பேட்டரி திறனுடன்கூடிய  மோட்டோ Z play நல்ல சாய்ஸ்.

Sony Xperia XZ

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick