இது இ-சைக்கிள்

கிராஸ்ஓவர் இ-பைக், வோல்ட்டா ஸாப்ம.சக்கர ராஜன் / படங்கள்: பெ.கெசன்ட்ரா இவாஞ்சலின்

‘நைன்ட்டீஸ் கிட்ஸ்' என்று பெருமையாகக் கூறிக் கொள்ளும் தொண்ணூறுகளில் பிறந்தவர்கள்தான், கடைசியாக சைக்கிள் ஓட்டுவதின் முழுமையான ஆனந்தத்தை அனுபவித்தவர்கள். ‘‘சைக்கிள் ஓட்டுவதின் ஆனந்தத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல, சாதாரண சைக்கிளுடன் நவீனத் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்க வேண்டும்’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த வோல்ட்டா மோட்டார்ஸின் நிறுவனரான அனூப் நிஷாந்த். இதன் விளைவுதான், இவருடைய குழுவினர் உருவாக்கிய வோல்ட்டா ஸாப் (Volta Zap) என்ற இந்தியாவின் முதல் கலப்பு இ-பைக் (crossover e-bike).

சைக்கிளை ஓட்டிப் பார்ப்பதற்கு முன்பாக நமக்கு ஒரு டெமோ கொடுத்தார் அனூப். ‘‘சைக்கிள் போன்று தோற்றமளிக்கும் வோல்ட்டா ஸாப், உண்மையில் ஒரு கலப்பு இ-பைக். அதாவது, இ-பைக்காகவும் பயன்

படுத்தலாம், பெடல் செய்து சைக்கிளாகவும் பயன்படுத்தலாம். ஹேண்டில்பாரில் உள்ள டிஸ்ப்ளேவை ஆன் செய்தால், இ-பைக். ஆஃப் செய்தால் சைக்கிள். ஏழு கியர்களைக்கொண்ட இந்த சைக்கிள், எந்த விதத்திலும் மிதிப்பதற்குச் சிரமம் இல்லாதவாறு, எடையைக் குறைக்கும் எண்ணத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. சாதாரண சைக்கிள்களைவிட, எடை கொஞ்சம் அதிகம்தான். தேவையில்லை என்றால், பேட்டரியை அகற்றிவிட்டு, மூன்று கிலோ எடையைக் குறைத்தும் பயன்படுத்தலாம்.

சைக்கிளின் ஃப்ரேமில், இ-பைக்காகப் பயன்படுத்த தேவையான லித்தியம் ஐயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 90 நிமிடங்கள் மட்டுமே ஆகும். ஒருமுறை சார்ஜ் செய்தால் 60 கி.மீ வரை ஓட்டலாம். இதை 120 கி.மீ வரை உயர்த்த சைக்கிள் கேரியரில் இரண்டாவது பேட்டரியைப் பொருத்த இடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ‘ஸ்மார்ட்போன் இண்டகிரேஷன்’ என்று கூறப்படும் வசதியினால், உங்கள் போனை சார்ஜ் செய்ய இடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டியாக மாற்ற வோல்ட்டா ஆண்ட்ராய்ட் ஆப்பை வெளியிட இருக்கிறோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick