திரும்பவும் விக்டர்! | TVS Victor returns - first drive in Hosur - Motor Vikatan | மோட்டார் விகடன்

திரும்பவும் விக்டர்!

ஃபர்ஸ்ட் டிரைவ்: டிவிஎஸ் விக்டர் 110 ராகுல் சிவகுரு, படங்கள்: பா.காளிமுத்து

விக்டர்... இந்தப் பெயரை எங்கேயோ கேட்டதுபோல இருக்கும். ஆம்! சுஸூகியிடம் இருந்து பிரிந்த பிறகு டிவிஎஸ் தயாரித்த முதல் பைக், விக்டர். கடந்த 2002-ல் அறிமுகமான இந்த பைக், போட்டி மிகுந்த 110சிசி மற்றும் 125 சிசி பிரிவுகளில் களமிறங்கி வெற்றிக்கொடி நாட்டியது. விற்பனை நன்றாக இருந்தாலும், இதனைத் தொடர்ந்து வந்த பல புதிய ஸ்டைலான பைக்குகளின் அணிவகுப்பால், விக்டர் மெள்ள மெள்ள தன் இடத்தை இழந்தது. ஸ்டார் சிட்டியின் வெற்றி மற்றும் பிரீமியம் கம்யூட்டர் பைக்குக்கான தேவை ஆகியவற்றால், தற்போது 2016-ல் புதிய அவதாரத்தில் மீண்டு வந்திருக்கும் இந்த பைக்கை, ஓசூரில் உள்ள டிவிஎஸ் தொழிற்சாலையின் டெஸ்ட் ட்ராக்கில் ஓட்டினோம்.

டிஸைன், சிறப்பம்சங்கள்

ஒரு 110சிசி பைக்குக்கு ஏற்ற மாடர்ன் தோற்றம் இருந்தாலும், மற்ற 110சிசி பைக்குகளில் இருந்து தனித்துத் தெரியக்கூடிய டிஸைனாக இல்லை. 60 வாட் திறன்மிக்க பல்புகள், நல்ல வெளிச்சத்தை அளிக்கும் என்கிறது டிவிஎஸ். அனலாக் டேக்கோ மீட்டருடன், தெளிவான டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டர் கொடுத்திருப்பதைப் பாராட்டலாம். அதில், டிவிஎஸ் பைக்குகளுக்கே உரித்தான ECO -
POWER மோடுகள், சர்வீஸ் இண்டி கேட்டர், ட்ரிப் மீட்டர், ஃப்யூல் கேஜ் ஆகியவை இடம் பெற்றுள்ளன. ஃபீனிக்ஸ் பைக் போலவே இதிலும் HAZARD WARNING வசதி அளிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் டேங்க், ஸ்டார் சிட்டியை நினைவுப் படுத்தினாலும் அதன் மூடி, ரசிக்கும்படியாக நல்ல தரத்தோடு இருக்கிறது. நீளமான சீட், உயரமான ஹேண்டில்பார், நடுவே ஃபுட் ரெஸ்ட் ஆகியவை இது கம்யூட்டர் பைக் என்பதை உறுதிப்படுத்துகின்றன. ஸ்டிக்கர்களுக்குப் பதிலாக க்ரோமில் பைக்கின் லோகோ செய்யப்பட்டிருப்பது கவர்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick