ஸ்மார்ட் பாய்ஸ் சாய்ஸ் எது?

ஒப்பீடு : பல்ஸர் AS150 vs ஹோண்டா CB ஹார்னெட் 160R vs சுஸூகி ஜிக்ஸர்தொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி

150 சிசி செக்மென்ட்டில் எது பெஸ்ட்? இந்தக் கேள்விக்கு பெரும்பாலோனோரின் பதில், சுஸூகி ஜிக்ஸர் அல்லது பஜாஜ் பல்ஸர் AS150 என்றுதான் இருக்கும். ஆனால், இப்போது ஹோண்டா சிபி ஹார்னெட் 160R பைக் விற்பனைக்கு வந்துவிட்ட  நிலையில், எது பெஸ்ட் என்ற கேள்விக்கான விடை என்னவாக இருக்கும்?

டிஸைன்

ஷார்ப்பான கோடுகளைக்கொண்டிருக்கிறது ஹார்னெட் பைக்கின் வடிவமைப்பு. அந்தக் கோடுகள், எல்லா பாகங்களையும் ஒருங்கிணைத்துக் காட்டுவது கச்சிதம். ஹார்னெட்டுடன் சேர்ந்து நிற்கும்போது, ஜிக்ஸரும் பல்ஸரும் சாஃப்ட்டாகத் தெரிகின்றன. பல்ஸர், ஸ்லிம்மாக இருந்தாலும் விண்ட் டிஃப்ளெக்டர் இருப்பதால், உயரமாகத் தெரிகிறது.

அனலாக் மற்றும் டிஜிட்டல் கலவையில் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் பல்ஸரில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. ஹார்னெட் பைக்கின் ஃபுல் டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டர், மாடர்னாக இருந்தாலும் சூரிய ஒளியில் பளிச்செனத் தெரியவில்லை. சுஸூகி ஜிக்ஸரின் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் நிறைய தகவல்கள் இருந்தாலும், பார்க்க சுமாராக இருக்கிறது. ஸ்விட்ச் கியர்களைப் பொறுத்தவரை பல்ஸர் மற்றும் ஜிக்ஸரில் உள்ள தரம், ஹார்னெட்டில் இல்லை. மேலும், இன்ஜினை அணைக்கும் கில் ஸ்விட்ச் இல்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick