வசதிகளில் கில்லி; ரைடிங்கில் எப்படி?

ஃபர்ஸ்ட் டிரைவ்: மஹிந்திரா கஸ்ட்டோ 125வேல்ஸ்

ஹிந்திராவின் பொறியாளர்களால் உருவாக்கப்பட்ட முதல் ஸ்கூட்டர், கஸ்ட்டோ 110. இந்தப் பெருமையைச் சொல்லி மட்டும் ஸ்கூட்டரை விற்பனை செய்ய முடியுமா? அதனால், மேலும் சக்தி வாய்ந்த கஸ்ட்டோ 125 ஸ்கூட்டரை உருவாக்கியிருக்கிறது மஹிந்திரா. புதிய கஸ்ட்டோ 125 ஸ்கூட்டரை, புனே அருகே மலைகள் சூழ்ந்த ரம்மியமான ஆற்றங்கரையில் அமைந்துள்ள லாவாஸா எனும் ஊரில் டெஸ்ட் டிரைவ் செய்தோம்.

டிஸைன்

தோற்றத்தில், கஸ்ட்டோ 110 போலவே இருக்கிறது 125. அதே பாக்ஸ் டைப் லுக். சமையல் கலைஞர்கள் கழுத்தில் கட்டியிருக்கும் ஏப்ரன் போன்ற அதே முன்பக்க ஸ்டைலிங். இதன் சீட் உயரத்தை நம் தேவைக்கு ஏற்ற மாதிரி கூட்டவும் குறைக்க முடியும். அதனால் உயரமானவர்களும் சரி, சற்று உயரம் குறைந்தவர்களும் சரி... இதை செளகரியமாக ஓட்ட முடியும்.

கஸ்ட்டோவின் ஹைலைட் என்று இதன் சிறப்பம்சங்களைப் பட்டியல் இடலாம். அதாவது, காரில் இருப்பதுபோல ஸ்டைலான ஃப்ளிப் கீ, ஃபாலோ மீ லேம்ப்ஸ், ஃபைண்டு மீ லேம்ப்ஸ் ஆகியவை கஸ்ட்டோ 125 ஸ்கூட்டரின் பலங்கள். அதேபோல, முன்புறம் இருந்து பின்புறமாகத் திறக்கும் சீட்டைத் திறந்தால், போதுமான ஸ்டோரேஜ் வசதி இருக்கிறது. ஃபைபர் பாடியில் இருக்கும் தரமான பெயின்ட், கிராஃபிக்ஸ் கவனிக்கப்பட வேண்டியவை. 110சிசியில் இருந்து 125சிசிக்கு உயரும்போது, மற்ற விஷயங்களிலும் முன்னேற்றத்தை வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பார்கள். உதாரணத்துக்கு பில்லியன் ரைடர், ஃபுட் ரெஸ்ட் பயன்படுத்த வாகாக இல்லை. பாடி கலரிலேயே கொடுக்கப்பட்டிருக்கும் மிரர்களும் அட்ஜெஸ்ட் செய்ய வசதியாக இல்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick