நீங்கள் வாங்கும் புது கார் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டதா?

கண்டுபிடிப்பது எப்படி?

சென்னையைப் புரட்டிப் போட்ட மழை வெள்ளத்தில், கார் ஷோரூம்களிலும் குடோன்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புத்தம் புதிய கார்கள், வெள்ளத்தில் மூழ்கிய காட்சிகளை மக்கள் பார்த்தார்கள்.

அதனால், புதிதாக கார் வாங்க ஷோரூம் போகும் ஒவ்வொருவருக்கும் தாங்கள் வாங்கும் கார் - வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் எழும். அந்தச் சந்தேகத்தை எப்படி நிவர்த்தி செய்வது?

  கார் கதவு மற்றும் ஜன்னல்களை மூடிவிட்டு காருக்குள் உட்கார்ந்து பார்க்கும்போது, மோசமான வாசனை வந்தால்... கார் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டது எனத் தெரிந்துகொள்ளலாம்.

  ஃப்ளோர் மேட்டைக் கொஞ்சம் எடுத்துவிட்டு, தரை ஈரப்பதத்தோடு இருக்கிறதா என்று சோதித்துப் பாருங்கள்.

    லாட்சஸ், ஸ்க்ரூ, பிராக்கெட் ஆகியவை துருப்பிடித்திருக்க வாய்ப்பே இல்லை. அப்படி துருப்பிடித்திருந்தால், அது தண்ணீரில் மூழ்கியது என்று அர்த்தம்.

   கார் சீட்டுக்கு அடியில் இருக்கும் ஸ்ப்ரிங்ஸ், காரின் அடிப்பாகம், உலோகமும் உலோகம் சேரும் இடங்களும் துருப் பிடித்திருந்தால்... உஷார்!

  கடைசியாக, ‘இந்த கார் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படாத கார்’ என்று ஷோரூம் அதிகாரிகளிடம் இருந்து கைப்பட எழுதி வாங்க வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick