க்ரூஸ் - இப்போது இன்னும் ஃப்ரெஷ்! | Chevrolet Cruze LTZ AT - Baselift - Motor Vikatan | மோட்டார் விகடன்

க்ரூஸ் - இப்போது இன்னும் ஃப்ரெஷ்!

ஃபேஸ்லிஃப்ட்: செவர்லே க்ரூஸ்தொகுப்பு: ராகுல் சிவகுரு

ந்தியாவில் விற்பனை செய்யப்படும் க்ரூஸ் செடானுக்குப் புத்துணர்ச்சி அளித்துள்ளது செவர்லே. முற்றிலும் புதிய ஃப்ளாட்பாட்மில் தயாரிக்கப்பட்ட க்ரூஸ், அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது விற்பனையில் இருக்கும் காரை ப்ரெஷ் ஆகக் காட்டுவதற்கான முயற்சியாக, இந்த ஃபேஸ்லிஃப்ட் பார்க்கப்படுகிறது. காரின் முன்பக்கத்தில் செவர்லே ஸ்பெஷல் ஸ்ப்ளிட் கிரில்லில் க்ரோம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட பம்பருக்கு புரொஜெக்டர் பனி விளக்குகள் மற்றும் LED டே டைம் ரன்னிங் லைட்ஸ் ஆகியவை அழகு சேர்க்கின்றன. க்ரூஸின் பின்பக்கத்தில் லிப் ஸ்பாய்லர் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது. மாற்றங்கள் அதிக அளவில் இல்லாவிட்டாலும், கார் பார்ப்பதற்கு ஸ்டைலாகவே இருக்கிறது. காரின் கேபினில், MYLINK டச் ஸ்கிரீன் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஆக்ஸ், யுஎஸ்பி, ப்ளூடூத், STITCHER இன்டர்நெட் ரேடியோ, வாய்ஸ் ரெககனைஷன் ஆகிய வசதிகள் உள்ளன. இவையெல்லாம் புதிய தொழில்நுட்பங்கள் இல்லையென்றாலும், டச் ஸ்கிரீன் துரிதமாக இயங்குகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick