கமர்ஷியல் ஸ்கார்ப்பியோ!

பிக்-அப் டிரக்: மஹிந்திரா இம்பீரியோகா.பாலமுருகன்

ம் நாட்டில், பிக்-அப் ட்ரக் செக்மென்ட்டில் மஹிந்திரா எப்போதும் முன்னிலையில் இருக்கிறது. ஸ்டேஷன் வேகன் வகை வாகனங்களுக்கு நம் நாட்டில் மதிப்பு இல்லை. ஆனால், அதுவே பிக்-அப் வேகனாக இருந்தால்தான் ஓகே.

கமர்ஷியல் வாகனம் என்றாலே - அதிக சக்தி, கூடுதல் கொள்ளளவு, சுமார் டிஸைன் மற்றும் குறைந்த விலையுடன் இருந்தால் போதும் என்ற காலம் மாறிக்கொண்டிருக்கிறது. பிக்-அப் ட்ரக் சந்தையில் பல்வேறு புதுமைகளைப் புகுத்திவரும் மஹிந்திரா, சமீபத்தில் இம்பீரியோ எனும் பிரீமியம் பிக்-அப் ட்ரக்கை அறிமுகம் செய்திருக்கிறது.  கம்பீரமான எஸ்யுவி வாகனம்போலத் தோற்றம் அளிக்கும் இம்பீரியோவில் என்ன ஸ்பெஷல்?

ஏற்கெனவே இருக்கும் மஹிந்திரா ஜீனியோவின் மறுஉருவாக்கம்தான் இந்த இம்பீரியோ. ஆனால், டிஸைன் முற்றிலும் புதுசு. ஜீனியோ, செடான் கார் போன்ற டிஸைனில் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால், இம்பீரியோ முரட்டு எஸ்யுவி போன்ற டிஸைனில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுவும் இம்பீரியோவின் முகப்பில் இருக்கும் வளைவு நெளிவுகள், கமர்ஷியல் வாகனச் சந்தைக்குப் புதுசு. பொதுவாக, ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குப் பொருளை எடுத்துச் செல்வது என்றால், அதில் டிரைவருடன் இன்னொரு பயணி மட்டுமே செல்ல முடியும். ஆனால், இம்பீரியோவில் 5 பேர் செல்லலாம். அடுத்ததாக, இதன் கேபினில் காரில் இருக்கும் அத்தனை வசதிகளும் இருக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick