அன்பு வணக்கம் !

திப்புக்குரிய வாசகப் பெருமக்களே...

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ திருவிழாவுக்கு, கோலாகலமாகத் தயாராகிவிட்டது ஆட்டோமொபைல் உலகம். டெல்லி அருகே கிரேட்டர் நொய்டாவின் இந்தியா எக்ஸ்போ சென்டரில், ஆட்டோ எக்ஸ்போ நடைபெறுகிறது.
 
இந்த ஆட்டோ எக்ஸ்போவில் ஹேட்ச்பேக், பிரீமியம் ஹேட்ச்பேக், செடான், லக்ஸூரி செடான், க்ராஸ்ஓவர், எஸ்யுவி, எம்பிவி, கம்யூட்டர் பைக்ஸ், ஸ்போர்ட்ஸ் பைக்ஸ், ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர் என்று எல்லாப் பிரிவுகளையும் சேர்த்து சுமார் 70 புதிய வாகனங்கள் அறிமுகமாகின்றன. தவிர, கான்செப்ட் கார்களும் ரேஸ் கார்களும் இந்த ஆட்டோ எக்ஸ்போவின் டெம்போவை எகிறவைக்கும்.

நம் நாட்டில் தடம்பதிக்க நேரம் பார்த்துக் காத்திருக்கும் சில புதிய வெளிநாட்டு நிறுவனங்களும், தங்களின் படைப்புகளை இந்த ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்துகின்றன. ஹைபிரிட் தொழில்நுட்பம் துவங்கி, ஏரோடைனமிக்ஸ் வரை ஆட்டோமொபைலோடு தொடர்புகொண்ட எல்லா தொழில்நுட்பங்களின் உச்சத்தையும் இந்த ஆட்டோ எக்ஸ்போ நமக்கு அறிமுகம் செய்யும்.

மாருதி சுஸூகியின் காம்பேக்ட் எஸ்யுவியான விட்டாரா பிரெஸ்ஸா களம் இறக்கப்பட ரெடி. இதற்குப் போட்டியாக, நான்கு மீட்டருக்கு உட்பட்ட காம்பேக்ட் எஸ்யுவி ஒன்றை குட்டி க்ரெட்டா வடிவில் ஹூண்டாயும் அறிமுகம் செய்கிறது. இவர்கள் இரண்டு பேருக்குமே போட்டியாக BR-V என்ற காம்பேக்ட் எஸ்யுவியை இந்த ஆட்டோ எக்ஸ்போவில் களம் இறக்குகிறது ஹோண்டா.

அடுத்த இரண்டு ஆண்டுகளில், என்னென்ன கார் - பைக்குகளும் தொழில்நுட்பங்களும் அறிமுகமாக இருக்கின்றன என்பதைச் சொல்லும் அட்வான்ஸ் காலண்டரே, இந்த ஆட்டோ எக்ஸ்போ. இதை ‘திருவிழாக்களின் திருவிழா’ எனலாம். ஆம், இது ஆட்டோமொபைல் கும்பமேளா.

ஆட்டோ எக்ஸ்போ கொண்டாட்டங்கள் அனைத்தையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள, motor.vikatan.com உடன் இணைந்திருங்கள்.

அன்புடன்,

ஆசிரியர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick