850 கோடிக்கு வர்த்தகம்! - அசத்திய கோவை ஆட்டோ ஷோ!

COIMBATORE MOTOR PARTS DEALER ASSOCIATION ச.ஜெ.ரவி, படங்கள்: த.ஸ்ரீனிவாசன், சு.ரகுராம்

நான்காவது ஆண்டாக, கடந்த டிசம்பரில் கோயமுத்தூர் ஆட்டோ ஷோவை வெற்றிகரமாக நடத்தியுள்ளது, கோயமுத்தூர் மோட்டார் பார்ட்ஸ் டீலர்ஸ் அசோசியேஷன்.
லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 170-க்கும் அதிகமான நிறுவனங்கள், 850 கோடி ரூபாய்க்கான வர்த்தகப் பேச்சுவார்த்தை என இந்தக் கண்காட்சி எதிர்பார்த்ததைவிட சிறப்பாக நடந்து முடிந்ததாகச் சொல்கிறார், ஆட்டோ ஷோவின் தலைவர் சிவக்குமார். அவரிடம் பேசினோம்.

“கோயமுத்தூர் மோட்டார் பார்ட்ஸ் டீலர்ஸ் அசோசியேஷன், 1966-ம் ஆண்டு துவங்கப்பட்டது. 50 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட எங்கள் சங்கத்தின் சார்பில், கடந்த 2009-ம் ஆண்டு முதல் ஆட்டோ ஷோ நடத்தி வருகிறோம். கண்காட்சி நடைபெற்ற 3 நாட்களில் 1.10 லட்சம் பார்வையாளர்கள் கண்காட்சியைப் பார்வையிட்டுள்ளனர். இந்தக் கண்காட்சி மூலம் 700 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கும் என எதிர்பார்த்தோம். எதிர்பார்ப்புக்கு மேலாக 850 கோடிக்கு வர்த்தகம் நடந்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய நான்கு மாநிலங்களில் இருந்து டீலர்கள் பங்கேற்றனர். மற்ற மாநிலங்களில் இருந்து பல நிறுவனங்களும் பங்கேற்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick