எக்கனாமிக்கல் பிரீமியம் கார்!

ரீடர்ஸ் ரெவ்யூ: மாருதி பெலினோ (டீ) ஞா.சுதாகர் , படங்கள்: த.ஸ்ரீநிவாசன்

ட்டோமொபைல் துறையில் இருப்பதால், மார்க்கெட்டுக்குப் புதிதாக வரும் கார்களைப் பற்றித் தெரிந்து கொள்வேன். நான் முதன்முதலாக வாங்கிய கார், அம்பாஸடர். பின்னர், மாருதி ஆம்னி வாங்கிப் பயன்படுத்திக்கொண்டிருந்தேன். மாருதி கார்களின் பராமரிப்புச் செலவு மிகவும் குறைவு என்பதுடன், ரீ-சேல் வேல்யூவும் அதிகமாக இருக்கும். அதன் காரணமாகவே, எனக்கு மாருதியின் தயாரிப்புகள் மீது மிகுந்த மதிப்பு உண்டு. 2007-ல் மாருதி ஸ்விஃப்ட் வாங்கினேன். அதை இப்போதும் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறேன்.

ஏன் பெலினோ?

அலுவலகப் பயன்பாட்டுக்கு ஸ்விஃப்ட் இருக்கிறது. குடும்பத்துடன் பயணம் செய்ய, புதிதாக ஒரு கார் வாங்கலாம் என முடிவு செய்து, என்ன கார் வாங்கலாம் என்று ஆலோசித்துக்கொண்டிருந்தேன். ஹோண்டா ஜாஸ், ஹூண்டாய் i20 ஆகிய கார்கள் என் முதல் கட்டப் பரிசீலனையில் இருந்தன. அப்போதுதான் ஸ்விஃப்ட் டீசல் காரில் இருக்கும் ஃபியட் இன்ஜினுடன், பெரிய மாறுதல்களோடு மாருதியின் பிரீமியம் காராக பெலினோ வந்தது. ஸ்விஃப்ட் காரை வாங்கி 8 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும்கூட இன்னும் நன்றாக இருக்கிறது. எனவே, அந்த இன்ஜின் மீது எனக்கு இருந்த நம்பிக்கையால், பெலினோவை டெஸ்ட் டிரைவ் செய்ய நினைத்தேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்