எந்திரன் - 14

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
இன்ஜின் எப்படி வேலை செய்கிறது?தொடர் தொழில்நுட்பம் பரணி ராஜன்

டந்த இதழில், இன்ஜினின் முக்கிய பாகங்கள் குறித்துப் பார்த்தோம். இப்போது இன்ஜின் எவ்வாறு இயங்குகிறது என்பதைப் பார்க்கலாம்.

1. இன்டேக் ஸ்ட்ரோக் (Intake stroke) :

இன்டேக்தான் முதல் ஸ்ட்ரோக். இந்த ஸ்ட்ரோக்கின்போது பிஸ்டன் TDC (Top dead center) நிலையில் இருந்து, BDC (Bottom dead center) நிலை நோக்கிப் பயணிக்கும். அப்போது சிலிண்டரில், பிஸ்டனின் மேற்புறம் வெற்றிடம் உருவாகிறது. அது, வெளியே இருந்து காற்று + பெட்ரோல் கலந்த எரிபொருள் கலவையை உள்ளே இழுக்கிறது. அதேசமயம், அதாவது பிஸ்டன் கீழிறங்கத் துவங்கும்போது, இன்லெட் வால்வுகள் மெதுவாகத் திறக்க ஆரம்பிக்கும். இதன் வழியாக, வெளியே இருந்து எரிபொருள் கலவை உள்ளிழுக்கப்படும். மருத்துவர்கள் ஊசி போடும்போது சிரிஞ்ஜை பின்னோக்கி இழுத்து, அதனுள் மருந்தை உள்ளெடுக்கும் முறையை இங்கு பொருத்திப் பார்த்துப் புரிந்துகொள்ளலாம். இப்படி உள்ளே இழுக்கப்படும் எரிபொருள் கலவையின் அளவு, இன்லெட் வால்வின் பரப்பளவைப் பொருத்தது. பெரிய வால்வு என்றால், அதிகமாக எரிபொருள் கலவை உள்ளிழுக்கப்படும். எரிபொருள் கலவை அதிகமானால், எரிதல் இன்னும் சிறப்பாக நடந்து, அதிக ஆற்றல் நமக்குக் கிடைக்கும். இந்த ஸ்ட்ரோக் நடக்கும்போது 90 சதவிகிதம் எக்ஸ்ஹாஸ்ட் வால்வுகள் மூடி இருக்கும். இல்லை என்றால், முந்தைய சுற்றில் மிச்சமான வெளியேறு வாயுக்களும் உள்ளிழுக்கப்பட்டு, அது எரிபொருள் கலவையுடன் கலந்து எரிதலின் திறனைப் பாதிக்கும்.

2. கம்ப்ரெஸன் ஸ்ட்ரோக்

கம்ப்ரெஸன் ஸ்ட்ரோக்கின்போது பிஸ்டன் BDC நிலையில் இருந்து, TDC நிலைக்கு நகரும். அவ்வாறு நகர ஆரம்பிக்கையில், இன்லெட் வால்வு மூடிக்கொள்ளும். எக்ஸ்ஹாஸ்ட் வால்வுகள் இப்போதும் மூடியே இருக்கும். அதனால், பிஸ்டனின் மேல்நோக்கிய இயக்கம், சிலிண்டருக்குள் இருக்கும் (முந்தைய ஸ்ட்ரோக்கில் உள்ளிழுக்கப்பட்ட) எரிபொருள் கலவையை அழுத்தும். இரு வால்வுகளும் மூடப்பட்ட நிலையில், அடைக்கப்பட்டிருக்கும் அறைக்குள் இருக்கும் எரிபொருள் கலவை, பிஸ்டனால் தொடர்ந்து அழுத்தப்படுகிறது. இதனால், அந்த எரிபொருள் கலவையின் வெப்பநிலை உயரும். பிஸ்டன் TDC நிலையை நெருங்கும் நேரத்தில், அழுத்தப்பட்ட எரிபொருள் கலவை, ஸ்பார்க் ப்ளக்கின் மூலம் தீப்பொறியால் எரிக்கப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick