ஷோகன் தி பாஸ்!

இரா.த.சசிபிரியா , படங்கள்: தே.தீட்ஷித்

ந்தியாவில் 1980 முதல் 1990 வரையான பத்தாண்டுகள், இருசக்கர வாகனத்தின் பொற்காலம். அப்போதுதான் ஜப்பான் நாட்டின் மூன்று பெரும் இரு சக்கர வாகன நிறுவனங்கள் இந்தியச் சந்தைக்கு வந்தன. அதில் ஒன்றுதான் சுஸூகி. தொழில்நுட்பக் கூட்டுறவு முறையில் இந்திய நிறுவனமான டிவிஎஸ் உடன் கூட்டணி அமைத்தது சுஸூகி. அப்படி டிவிஎஸ் மற்றும் சுஸூகியால் அறிமுகம் செய்யப்பட்ட சூப்பர் பைக் ‘தி பாஸ்’ என்று வர்ணிக்கப்படும் டிவிஎஸ் சுஸூகி ஷோகன்.

ஷோகன் 1993-ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மார்க்கெட்டுக்கு வரும் ஒரு சில பைக்குகளே தனக்கென தனி முத்திரையைப் பதிக்கும். அப்படி ஷோகன், தனி முத்திரை பதித்ததுடன் இந்தியாவின் இரு சக்கரச் சந்தையில் கொடிகட்டிப் பறந்தது. இளைய தலைமுறை பைக் பிரியர்களின் மோஸ்ட் வான்டட் பைக்காக இருந்தது. இதன் சிறப்புச் சத்தத்துக்காகவே இதை விரும்பி வாங்கியவர்கள் ஏராளம். இதன் உற்பத்தி 1998-ம் ஆண்டில் நிறுத்தப்பட்டது. ஆனாலும்கூட, இன்றும் ஷோகனைத் தேடி வாங்கி ஓட்டிக்கொண்டிருப்பவர்களை பார்க்க முடியும்.

திருச்சியைச் சேர்ந்த சத்யா இரு சக்கர வாகனங்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர். “இந்தியாவின் முதல் 5-ஸ்பீடு 14bhp சக்திகொண்ட பைக் ஷோகன். புது பைக் வாங்கும் வாய்ப்பு அப்போது எனக்கு கிடைக்கவில்லை. 1996-ம் ஆண்டில், இந்த பைக்கை பழைய பைக் மார்க்கெட்டில் வாங்கினேன். இதை வாங்கக் காரணம், இதன் ரசிக்கும்படியான இன்ஜின் சத்தமும், டாப் ஸ்பீடும்தான்.
கடந்த 20 ஆண்டுகளாக எங்கள் குடும்பத்தில் ஓர் அங்கமாகவே இருக்கும் பைக் ஷோகன். நான் பைக்கில் வருகிறேன் என்பதை அந்த ஏரியா முழுக்க அறிவித்துவிடும் இதன் தனித்துவமான சத்தம். எனக்குப் பிடித்தமான லுக்குடன் குறைவான எடை, அபாரமான பெர்ஃபாமென்ஸ், வடிவமைப்பு என யுனிக் பைக். இப்பொழுது வரும் பைக்குகளில்கூட இந்தளவு பிக்-அப் இல்லை. இதன் ஓட்டுதல் அனுபவத்தை, ‘ஃபன் டு டிரைவ்’ என்று வகைப்படுத்தலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick