பவர் ரேஞ்சர்!

ஃபர்ஸ்ட் டிரைவ்: ரேஞ்ச்ரோவர் இவோக் தொகுப்பு: ராகுல் சிவகுரு

மார்ச் 2015-ல் ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனம், மேம்படுத்தப்பட்ட இவோக் எஸ்யுவி காரை அறிமுகப்படுத்தியது. தோற்றத்தில் மாற்றங்கள் இல்லாவிட்டாலும் கூடுதல் சிறப்பம்சங்களுடன், முற்றிலும் புதிய 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் அந்த காரில் பொருத்தப்பட்டது. மேலும், புனேவில் உள்ள தொழிற்சாலையில் கார் அசெம்பிள் செய்யப்படுவதால், அதன் விலையும் வேரியன்ட்டுக்கு ஏற்ப 6 முதல் 9 லட்சம் வரை குறைந்தது. சரியாக எட்டு மாத இடைவெளியில், மீண்டும் ஒரு ஃபேஸ்லிஃப்ட்டை இவோக் காருக்கு அளித்துள்ளது ஜாகுவார் லேண்ட்ரோவர்.
விலை அதிகமான ரேஞ்ச்ரோவர் கார்களில் இருக்கும் டிஸைன் கோட்பாடுகள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதனால், காரின் சைஸை மறந்துவிட்டுப் பார்த்தால், ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் போலவே இருக்கிறது இவோக்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்