ரியல் ஆஃப்ரேட்டர்!

ஃபர்ஸ்ட் டிரைவ்: ஃபோர்டு எண்டேவர்தொகுப்பு: ராகுல் சிவகுரு

புதிய ஃபோர்டு எண்டேவரின் சைஸைப் பார்த்து விக்கித்து நின்றுவிட்டேன். இத்தனைக்கும் காரின் நீளம் 5 மீட்டருக்கும் குறைவு. ஆனால், உயரமான ஒரு நபர் காருக்கு முன்னே நின்றால், பானெட் அவரது மார்பை முட்டும் அளவுக்கு உயரமாக இருக்கிறது. பெரிய வீல் ஆர்ச்சுகள் மற்றும் 225 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், காரின் பிரமாண்டத்தைக் கூட்டுகின்றன. தாய்லாந்தில் விற்பனையாகும் எண்டேவரில் 20 இன்ச் வீல்கள் இருக்கும் நிலையில், இந்தியாவுக்கு வரவிருக்கும் காரில், 18 இன்ச் வீல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதனால், வீலுக்கும் வீல் ஆர்ச்சுக்கும் இடையே அதிக இடைவெளி இருப்பது, காரின் கம்பீரத்தைச் சற்று குறைத்துவிடுகிறது. பழைய காருடன் ஒப்பிடும்போது, புதிய எண்டேவரின் பின்பக்கம், ஒட்டுமொத்தமாக மாறியிருக்கிறது. அதாவது, பின்பக்கக் கதவில் இருக்க வேண்டிய ஸ்பேர் வீல், காருக்கு அடியில் சென்றுவிட்டது.

சிட்டி டிரைவிங்

காரின் எலெக்ட்ரிக் ஸ்டீயரிங், குறைவான வேகங்களில் எடை குறைவாகவும் ஸ்மூத்தாகவும் இருக்கிறது. இதனால், காரை சடாரென எளிதாகத் திருப்ப முடிகிறது. மேலும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், பிரேக் பெடல், ஆக்ஸிலரேட்டர் பெடல் ஆகியவை பயன்படுத்த வசதியாக இருக்கின்றன. பழைய கார்போல, ஸ்பேர் வீல் கதவில் இல்லாததால், புதிய காரை ரிவர்ஸ் எடுப்பது எளிது. காரின் வேகத்தை அதிகரித்தபோது, ஸ்டீயரிங்கின் எடை கூடுவதை உணர முடிந்தது. இதனால், லேன் மாறுவது சுலபமாக இருக்கிறது. கிட்டத்தட்ட 2.4 டன் எடை இருந்தாலும், காரைக் கையாள்வது ஸ்போர்ட்டியான அனுபவமாகவே இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick