மாறியது இன்ஜின்!

ஃபேஸ்லிஃப்ட்: ஃபோர்டு எக்கோஸ்போர்ட்தொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி

றிமுகமாகிவிட்டது 2016 ஃபோர்டு எக்கோஸ்போர்ட். ‘பார்த்தால் அப்படித் தெரியவில்லையே..!’ என்கிறீர்களா? உண்மைதான் புதிய எக்கோஸ்போர்ட்டின் வெளிப்புற டிஸைனில் பெரிய மாற்றங்கள் இல்லை. ஆனால், மெக்கானிக்கலாக மிக முக்கிய மாற்றம் ஒன்று நிகழ்ந்திருக்கிறது.

எக்கோஸ்போர்ட் காரின் 1.5 லிட்டர் டீசல் இன்ஜினில் இப்போது, ஃபிக்ஸட் ஜியோமெட்ரி டர்போ சார்ஜர் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், இன்ஜினின் சக்தி 8.9bhp, டார்க் 1.1kgm அளவுகளில் அதிகரித்துள்ளது. ஆனால், இந்த bhp உயர்வு பெர்ஃபாமென்ஸில் வெளிப்படவில்லை. பழைய எக்கோஸ்போர்ட்டைவிட 0-100 கி.மீ வேகத்தை வெறும் 0.05 விநாடிதான் குறைவாக அடைகிறது. இன்ஜின் முன்பைவிட மிகச் சீரான பவர் டெலிவரியைக் கொடுக்கிறது. டர்போ லேக்கை அதிகம் உணர முடியவில்லை. ஐடிலிங்கிலும், இயக்கத்திலும் முன்பைவிட ஸ்மூத்தாக இருக்கிறது இந்த இன்ஜின். அதிக ஆர்பிஎம்-ல் மட்டும்தான் இன்ஜின் சத்தம் நெருடல்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick