சிக்னலில் தானாகவே நியூட்ரல்!

ஃபர்ஸ்ட் டிரைவ்: மஹிந்திரா XUV5OO ATதொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி

ரு வழியாக அறிமுகமாகிவிட்டது மஹிந்திரா XUV500 ஆட்டோமேட்டிக் மாடல். புதிய 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், ஏற்கெனவே உள்ள 2.2 லிட்டர் டீசல் இன்ஜினுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால், இது புதிய ஸ்கார்ப்பியோ ஆட்டோமேட்டிக் காரில் உள்ள DSI கியர்பாக்ஸ் இல்லை. இது Aisin நிறுவனத்தின் கியர்பாக்ஸ். எப்படி இருக்கிறது XUV500 ஆட்டோமேட்டிக்?

மேனுவல் மாடலில் உள்ள சுமாரான கிளட்ச்சும், கியர்பாக்ஸ் ஷிஃப்ட்டும் இந்த காரில் கிடையாது என்பதே பெரிய திருப்தி. புதிய ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இன்ஜினுடன் நன்றாகவே பொருந்தியுள்ளது. ஃபுல் - ஆட்டோ மோடில் கியர் ஷிஃப்ட் மிக ஸ்மூத்தாகவும், துரிதமாகவும் செயல்படுகிறது. ரெஸ்பான்ஸிவ்வாகவும் இருக்கிறது. தேவைப்பட்டால் 1,500 ஆர்பிஎம்-ல்கூட அப்-ஷிஃப்ட் ஆகிறது. ஆக்ஸிலரேட்டரைத் தொடர்ந்து மிதித்தால், 3,500-4,500 ஆர்பிஎம் வரை கியர் மாற்றவில்லை  என்றாலும் தாங்குகிறது. மேனுவல் மோடு பயன்படுத்தும் எண்ணம் எழவில்லை. மேனுவலில் ஓட்ட வேண்டும் என்றால், பேடில் ஷிஃப்ட் கிடையாது. எனவே, ‘+/-’ வழிதான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick