வின்டேஜ் கலெக்டர்!

ச.ஜெ.ரவி , படங்கள்:தி.விஜய்

கோவையை அடுத்த வாளையாறு பகுதியைச் சேர்ந்த நவீனுக்கு, வயது 26. ஆனால், வின்டேஜ் வாகனங்கள் மீதான அவரின் காதலுக்கு வயது 22. நான்கு வயதில் இருந்தே வாகனங்களின் மீது தீராக் காதலுடன், கார் பைக்குகளுடனே வளர்ந்து வந்தவர் நவீன். ‘வின்டேஜ், கிளாஸிக்’ என 27 கார்களை பழைமை மாறாமல் புதுப்பித்து இன்றளவும் பயன்படுத்தியும் வருகிறார்.
 
வின்டேஜ், கிளாஸிக் வாகனங்களைப் பாதுகாத்ததில் தனக்கு உள்ள அனுபவத்தின் மூலம், இப்போது வின்டேஜ் கார்களைப் புதுப்பித்துக் கொடுக்கும் வேலையையும் செய்துவருகிறார்.
ஒரு முற்பகல் நேரத்தில் வாளையாறில் உள்ள தோட்ட வீட்டில் நவீனைச் சந்தித்தோம். தான் பொக்கிஷமாகப் பாதுகாத்து வரும் வின்டேஜ் மற்றும் கிளாஸிக் கார்களை நம்மிடம் காட்டி, கார் வாங்கியதன் பின்னணியை ஆர்வத்துடன் விவரித்தார்.

“எனக்கு கார்கள் மீது சின்ன வயதில் இருந்தே ஆர்வம் அதிகம். என் தாத்தா பழனியப்பன், 1954 மாடல் ‘ஹிந்துஸ்தான் 14’ மாடல் கார் வைத்திருந்தார். அதனாலோ என்னவோ, என் நான்காவது வயதில் இருந்தே கார் என்றாலே ஓடிப் போய் வேடிக்கை பார்க்கும் ஈர்ப்பு இருந்தது.

நான் பத்தாவது படிக்கும்போது, ஹிந்துஸ்தான் 14 மாடல் கார்களைச் சேகரிக்க வேண்டும் எனத் தோன்றியது. அதில் இருந்து ஹிந்துஸ்தான் 14 மாடல் கார் எங்கே கிடைக்கும் என விசாரிக்கத் துவங்கினேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick