இன்ஜின் எப்படி செயல்படுகிறது?

FOUR STROKE ENGINEதொடர்: தொழில்நுட்பம்தொகுப்பு: பரணிராஜன்

 ‘இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ’ எனும் வரிகளுக்கேற்ப, வாகனத்தின் இதயம்போலச் செயல்படுவதுதான் இன்ஜின். இதன் ஆற்றலில்தான் வாகனம் செலுத்தப்படுகிறது. ஆரம்பத்தில் நீராவி இன்ஜினால் இயக்கப்பட்ட ஆட்டோமொபைல் வாகனங்கள், பரிணாம வளர்ச்சியில் இன்டெர்னல் கம்பஸன் இன்ஜின்களின் உதவியால் இயங்க ஆரம்பித்தன. இன்றைய எலெக்ட்ரானிக், பேட்டரி கார்கள் யுகத்திலும்கூட அசைக்க முடியாத அளவுக்குத் தனி சக்தியாக இன்டெர்னல் கம்பஸன் இன்ஜின்கள்(Internal Combustion Engines) விளங்குகின்றன.

வாகனத்தின் சக்தி, திருப்புத் திறன், இழுவைத் திறன் போன்றவை அதன் இன்ஜினை மையமாகக்கொண்டே அமையும். குறைந்த சக்தி தேவைப்படும் மோட்டார் சைக்கிள், ஒற்றை சிலிண்டர் கொண்ட இன்ஜினையும், அதிகமான சக்தி தேவைப்படும் கார் போன்ற வாகனங்கள் 4 அல்லது அதற்கு மேற்பட்ட சிலிண்டர்கள் கொண்ட இன்ஜினையும் தங்கள் இதயமாகக் கொண்டிருக்கின்றன. இன்ஜின்கள் தங்கள் சக்திக்கேற்றவாறு   வாகனங்களை இயக்குகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick