அடுத்த டார்கெட் ஃபார்முலா ரேஸ்தான்!

சந்திப்பு, படம்: ஜெ.விக்னேஷ்

கார் ஓட்டுவதை ரசிக்க மட்டுமே முடியும் சிறுவர்களுக்கு, கோ-கார்ட் காரை ஓட்டுவது பரவச அனுபவமாக இருக்கும். 13 வயது சிறுவனான யாஷ் ஆராத்யாவுக்கும் இது பொருந்தும். ஆனால், அதையும் தாண்டி இப்போது அவன், கோ-கார்ட் ரேஸில் ஏராளமான வெற்றிகளையும், விருதுகளையும் ஜெயித்திருக்கிறான்.

பெங்களூரில் உள்ள பிஷப் காட்டன் ஆண்கள் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயிலும் யாஷ் ஆராத்யா,2014-ம் ஆண்டு ஜே.கே டயர்ஸ் நிறுவனம் நடத்திய தேசிய அளவிலான கார்ட்டிங் போட்டியில், மைக்ரோ மேக்ஸ் பிரிவில் முதல் இடத்தைப் பிடித்து அசத்தினான். மேலும், அதே பிரிவில் 2014-ம் ஆண்டுக்கான ‘சிறந்த கார்ட்டர்’ விருதையும் வென்றான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick