பிரிட்டிஷ் டூரிங் சாம்பியன் ஆகணும்!

ச.ஜெ.ரவி , படங்கள்: தி.விஜய்

டுத்தடுத்து இரு ஆண்டுகளில், ‘இந்தியன் டூரிங் கார்ஸ் சாம்பியன்’ பட்டத்தை வென்று, இந்திய ரேஸ் உலகில் கவனிக்கத்தக்க இளைஞராகி இருக்கிறார், கோவையைச் சேர்ந்த அர்ஜூன் நரேந்திரன். 2014-ம் ஆண்டைத் தொடர்ந்து, இந்த ஆண்டும் இந்தியன் டூரிங் கார்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற உற்சாகத்தில் இருந்த அர்ஜூனை, கோவையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம்.

“என்னோட 17 வயதில் இருந்து, அதாவது 2011-ல் இருந்து ரேஸில் பங்கேற்கிறேன். அப்போது எனது ஃபிட்னஸ் சரியாக இல்லை. அதனால், என்னால் 10-வது இடம், 11-வது இடம்தான் வர முடிந்தது. அதன் பின்பு, ஃபிட்னஸில் கவனம் செலுத்தினேன். அடுத்தடுத்த ஆண்டுகளில் முன்னேற்றமும் கண்டேன். 2014-ம் ஆண்டு எனக்கு மறக்க முடியாத ஆண்டு. ரேஸின் 11-வது ரவுண்டில் அதிக புள்ளிகள் எடுத்து, நேஷனல் டூரிங் கார் சாம்பியன் ஆனேன். இந்த ஆண்டும் நான்தான் சாம்பியன். சென்னை, டெல்லி, கோவை என மூன்று இடங்களில், 12 ரவுண்டுகளாக நடந்த இந்த ரேஸ் சாம்பியன் ஷிப்பில், 9-வது ரவுண்டிலேயே நான் சாம்பியன் ஆகிவிட்டேன்!” என உற்சாகமாகப் பேசினார் அர்ஜூன்.

“சின்ன வயதில் இருந்தே கார் ஓட்டும் ஆர்வம் அதிகம். என் அப்பா நரேந்திரன், மாமா லீலாகிருஷ்ணன், ராம் நாராயணன் என நிறைய பேர் கார் ரேஸ் ஓட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் எப்போது சந்தித்தாலும் ரேஸ் பற்றித்தான் பேசுவார்கள். அதனால்தானோ என்னவோ, என் எட்டாவது வயதிலேயே கோ-கார்ட் ரேஸில் கலந்கொள்ள விரும்பினேன். ஆனால், அப்போது வீட்டில் அனுமதிக்கவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick