தெறி காட்டும் கவாஸாகி!

ஃபர்ஸ்ட் ரைடு: கவாஸாகி நின்ஜா ZX-10R தொகுப்பு: ராகுல் சிவகுரு

வாஸாகி, 2016-ம் ஆண்டுக்கான ZX-10R பைக்கைத் தற்போது அப்டேட் செய்து அறிமுகம் செய்திருக்கிறது. WSBK சாம்பியன்ஷிப் கோப்பையை இரண்டு முறை தொடர்ந்து வென்றிருப்பதால், மேலும் தெறி கூடியிருக்கிறது. ஆனால், புதிய ZX-10R-ன் தோற்றம் பழைய பைக்கைப்போலவே இருந்தாலும், மெக்கானிக்கலாக நிறைய மாற்றங்கள் பைக்கில் நிகழ்ந்துள்ளன.

டிஸைன், தொழில்நுட்பம்

கவாஸாகி ரேஸிங் அணியின் கிராஃபிக்ஸில் வசீகரிக்கிறது புதிய ZX-10R. முன்பக்க மட்கார்டு, பார்ப்பதற்கு H2R பைக்கில் இருப்பது போலவே இருக்கிறது. இது ரேடியேட்டருக்குப் போகும் காற்றின் அளவை அதிகரித்து, இன்ஜின் விரைவாக கூல் ஆக துணைபுரிகிறது. இரட்டை ஹெட்லைட்ஸ் செம ஸ்போர்ட்டி. விண்ட் ஸ்கிரீனின் அகலம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன் பக்கவாட்டில் இருக்கும் ஏர் இன்டேக்குகள், ஹெல்மெட்டின் மீது மோதும் காற்றின் அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன. மேலும், பைக்கை ஓட்டுபவரின் கைகளுக்குக் கீழே காற்று செல்லும் என்பதால், தோள்பட்டையில் வலி ஏற்படுவது குறையும் என்கிறது கவாஸாகி. இன்ஸ்ட்ரூமென்ட் கன்ஸோல் LCD ஸ்கிரீனில் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஹேண்டில்பாரின் இடதுபக்கத்தில், ரைடரின் திறன் மற்றும் சூழலுக்கு ஏற்ப பைக்கின் செட்-அப்பை மாற்றுவதற்கான ஒற்றை ஸ்விட்ச் பொசிஷன் செய்யப்பட்டுள்ளது. முன்பக்க ஃபோர்க்கின் மீது இருக்கும் பெரிய சிவப்பு நிற கேன்களில் நைட்ரஜன் அடைக்கப்பட்டுள்ளது. Showa-வின் Balance Free Fork (BFF) என அழைக்கப்படும் இவை, கவாஸாகியின் WSBK பைக்குகளுக்காக ஸ்பெஷலாகத் தயாரிக்கப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick