ஸ்ட்ராங் ஸ்கூட்டர்!

கிளாஸிக் பைக்: கைனடிக் ஹோண்டா சந்திப்பு, படம் : ஜெ.விக்னேஷ்

ஒரு காலத்தில் வேலைக்குச் செல்லும் பெண்களின் வரப்பிரசாதம் கைனடிக் ஹோண்டா.

ஜப்பானைச் சேர்ந்த ஹோண்டா, 1984-ல் இந்தியாவின் கைனடிக் இன்ஜினீயரிங் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த ஸ்கூட்டர் கைனடிக் ஹோண்டா. 98 சிசி 2 ஸ்ட்ரோக் கியர்லெஸ் ஸ்கூட்டரான இது, ஆரம்பத்தில் கைனடிக் ஹோண்டா DX மற்றும் கைனடிக் ஹோண்டா EX எனும் மாடல்களில்  அறிமுகமானது.

1994-ம் ஆண்டு, புதிய கிராஃபிக் ஸ்டிக்கர்களுடன் கைனடிக் ஹோண்டா ZX மாடல் மார்க்கெட்டுக்கு வந்தது. இதன் பின் கைனடிக் மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் பிரிய, கைனடிக் நிறுவனம், 2001-ம் ஆண்டு, 110 சிசி கைனடிக் ZX Zoom மாடலை அறிமுகப்படுத்தியது.

பின்பு ஆக்டிவா, ஸ்கூட்டி போன்ற ஸ்கூட்டர்களின் படையெடுப்பால், கைனடிக் நிறுவனத்தின் ஸ்கூட்டர் விற்பனை குறையத் தொடங்கியது. ஆனாலும், செல்ஃப் ஸ்டார்ட் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகப்படுத்திய பெருமை கைனடிக் ஹோண்டாவையே சேரும்.

சென்னை, புதுப்பேட்டையில், ஃபர்னிச்சர் வியாபாரம் செய்யும் சையது மெஹபூப் ஷா, கைனடிக் ZX Zoom ஸ்கூட்டரை, 2003-ம் ஆண்டில் இருந்து பயன்படுத்தி வருகிறார். “நான் 1990-களில் ஜாவா பிரியன். பல ஆண்டுகளாக ஜாவா ஓட்டி வந்த நான், வேலைக்கு ஏதுவாக, 40,000 ரூபாய்க்கு இந்த கைனடிக் ஸ்கூட்டரை வாங்கினேன். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick