மிரட்டலாக ஆல்ட்டர் செய்யப்பட்டுள்ள ஆல்ட்டிஸ்!

ஃபர்ஸ்ட் லுக்: டொயோட்டா கரோலா ஆல்ட்டிஸ்

ந்தியாவின் நம்பர் 1 எக்ஸிக்யூட்டிவ் செடானான டொயோட்டா கரோலாவுக்கு ஃபேஸ்லிஃப்ட் மாடல் வந்தாச்சு! 2017-ம் ஆண்டில் இங்கு விற்பனைக்கு வர இருக்கும் புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல், இப்போது விற்பனையில் உள்ள மாடலின் வெற்றியைத் தக்க வைக்க உதவும். ஏன்?

கரோலா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் டிஸைன்  செம ஸ்போர்ட்டியாக உள்ளது. முன்பக்கம் மிரட்டல். காரின் அடிப்படை அளவுகோல்களில் மாற்றங்கள் இல்லை என்றாலும், ஸ்டைலில் நிறைய மாற்றங்கள். கிரில் முன்பைவிட குறுகலாக உள்ளது. ஹெட்லைட்டுகள் நீளமாக அமைக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் கெத்தான ஃபுல் LED ஹெட்லைட்ஸுடன் வந்தாலும், இங்கே சாதாரண ஸெனான் லைட்டுகள்தான். முன் பக்க பம்ப்பரும் புதிது! பின் பக்க டிசைனில் பெரிய மாற்றங்கள் இல்லை.

காரின் உள்ளே இப்போது புதிய ‘டொயோட்டா டச் 2’ எனப்படும்  7-இன்ச் டச் ஸ்கிரீன் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டச் ஸ்கிரீன் சிஸ்டம் பயன்படுத்த மொபைல் போன் டச் போலவே இருக்கும் என்கிறது டொயோட்டா. இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலில் 4.2 இன்ச் மல்டி-இன்ஃபர்மேஷன் டிஸ்பிளே சேர்க்கப்பட்டுள்ளது. கிளைமேட் கன்ட்ரோல் சிஸ்டமும் இப்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இன்ஜின், சஸ்பென்ஷனில் மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை. எனவே, இப்போது உள்ள 140bhp 1.8 லிட்டர் பெட்ரோல் மற்றும் 88bhp 1.4 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள்தான் இருக்கும் என எதிர்பார்க்கலாம். ஃபேஸ்லிஃப்ட் மாடல் என்றாலும், விலையில் மாற்றம் இருக்காது என்கிறார்கள்.

தொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்